இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தனது ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் டெக் மஹிந்திரா தற்போது சோகக்தில் மூழ்கியுள்ளனர்.
இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை போலவே டெக் மஹிந்திரா தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளது. டெக் மஹிந்திரா தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் சில பிரிவினருக்கு சம்பள உயர்வை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக டெக் மஹிந்திரா தனது காலாண்டு முடிவுகளை காரணம் காட்டுகிறது, டெக் மஹிந்திரா கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 39 சதவீதம் குறைவான லாபத்தை பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
டெக் மஹிந்திரா நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டு ஜூன் காலாண்டில் 1,131 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்ற நிலையில், ஜூன் 2023 காலாண்டில் வெறும் 693 கோடி ரூபாயை மட்டுமே மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கிட்டத்தட்ட 39 சதவீதம் சரிவாகும். இதேபோல் ஜூன் காலாண்டில் 4 சதவீத உயர்வுடன் 13,470 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது.
ஜூன் காலாண்டின் முடிவில் பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்ததன் மூலம் நிறுவனத்தின் EBIT margin அளவுகள் 1.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது என டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ரோஹித் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு ஏற்கனவே சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட நிலையில், உயர் அதிகாரிகள் சில பிரிவினருக்கு மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. இதில் பெரும் பகுதியினர் உயர் பதவியில் இருக்கும் மூத்த அதிகாரிகள் தான்.


Click it and Unblock the Notifications