இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெக் மஹிந்திரா (Tech Mahindra) நிறுவனம் பல முக்கிய மாற்றங்களை இந்த வருடத்தின் இறுதியில் இருந்து எதிர்கொள்ள போகும் நிலையில், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ சிபி குர்னானி சம்பளத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து டெக் மஹிந்திரா-வின் ஆதிக்கம் இந்திய ஐடி சேவை துறையில் எதிரொலிக்க துவங்கியது, மேலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கீட்டை கொண்டு உள்ள சிபி குர்னானியின் சம்பளம் 2023 ஆம் நிதியாண்டில் பாதியாக குறைந்துள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ சிபி குர்னானி-யின் சம்பளம் 2023 ஆம் நிதியாண்டில் 51 சதவீதம் குறைந்து வெறும் 30.14 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் 63 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிபி குர்னானி-யின் 30.14 கோடி ரூபாய் சம்பளத்தில் 2.75 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 25.56 கோடி ரூபாயை perquisites ஆகவும், 1.83 கோடி ரூபாயை கமிஷன் ஆகவும் பெற்றுள்ளார். மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மீடியன் சம்பளம் சராசரியாக 6.62 லட்சம் ரூபாயாக உள்ளது.
Tech Mahindra நிறுவன ஊழியர்களின் மீடியன் சம்பளத்தை ஒப்பிடுகையில் சிபி குர்னானியின் 30.14 கோடி ரூபாய் சம்பளம் சுமார் 467 மடங்கு அதிகம். இக்காலக்கட்டத்தில் சிஇஓ சம்பளம் 51 சதவீதம் சரிந்த நிலையில், ஊழியர்களின் சராசரி சம்பளம் 25.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிபி குர்னானி சம்பளம் தடாலடியாக 51 சதவீதம் வரையில் சரிய மிக முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் லாபம் 13.2 சதவீதம் சரிந்து வெறும் 4,832 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதேகாலக்கட்டத்தில் வருவாய் 19.4 சதவீதம் உயர்ந்து 53,390 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபத்தில் ஏற்பட்ட சரிவு குர்னானியின் சம்பளத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முடிவில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,52,400 ஆக உள்ளது, இதுமட்டும் அல்லாமல் 12 மாத அடிப்படையில் அட்ரிஷன் விகிதம் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் 64 வயதான சிபி குர்னானி வருகிற டிசம்பர் 19, 2023ல் ஓய்வு பெறும் நிலையில் பதவியில் இன்போசில் BFSI பிரிவின் தலைவரான மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். ஜூன் 2023 முதல் டெக் மஹிந்திரா நிர்வாக பணியில் ஈடுப்பட்டு வரும் மோஹித், சிபி குர்னானி ஓய்வுக்கு பின்பு தனது பணிகளை அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளார்.


Click it and Unblock the Notifications