இந்திய ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திராவின் அடுத்த சிஇஓ-வாக முன்னாள் இன்போசிஸ் BFSI பிரிவு தலைவர் மோஹித் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து சிபி குர்னானி வெளியேற்றத்திற்காகவும், அடுத்தக்கட்ட நிர்வாக மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெறுவதை ஒட்டி, மஹிந்திரா & மஹிந்திரா நிர்வாக குழுவில் சிபி குர்னானி செயல் அல்லாத தனிப்பட்ட இயக்குநர் பதவியில் இருந்து டிசம்பர் 20, 2023 முதல் ராஜினாமா செய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை மஹிந்திரா & மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மேலும் இதே டிசம்பர் 20 ஆம் தேதி தான் டெக் மஹிந்திராவின் சிஇஓ பதவியில் இருந்து சிபி குர்னானி ராஜினாமா செய்கிறார். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக குழுவின் கூட்டத்தில் குர்னானியின் ராஜினாமாவை குறிப்பிட்டு அதை குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது, இதோடு மஹிந்திரா & மஹிந்திரா பங்குச்சந்தையிலும் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து டெக் மஹிந்திராவின் சிஇஓ சிபி குர்னானி தனது ராஜினாமா கடிதத்தில் டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நான் டிசம்பர் 20, 2023 முதல் ஓய்வு பெறுகிறேன். அதைக் கருத்தில் கொண்டு, மஹிந்திரா & மஹிந்திராவின் இயக்குநர் குழுவில் இருந்து நான் விலகுகிறேன் என்று இக்குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிடம் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.
மஹிந்திரா & மஹிந்திராவின் இயக்குநர் குழுவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். இந்த நேரத்தில் எனது சக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் M&M நிர்வாகக் குழுவுடன் தொடர்புகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தனது கடிதத்தில் கூறினார்.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் டெக் மஹிந்திரா-வின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான நிதியியல் சேவை பிரிவின் தலைவர் ஆவார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மோஹித் ஜோஷி சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். மோஹித் ஜோஷி இன்போசிஸில் நிதிச் சேவைகள் மற்றும் ஹெல்த்கேர், லைப் சையின்ஸ் வர்த்தகங்களை நிர்வாகம் செய்து வந்தார். இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பிரிவுகளும் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications