ஒரு நாளைக்கு ரூ.14.47 லட்சம் ஊதியமாக பெற்ற இந்திய டெக் நிறுவனத்தின் CEO...

இந்தியாவில் ஐடி சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது டெக் மகேந்திரா. இந்த நிறுவனம் தன்னுடைய தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவருக்கு கடந்த ஆண்டு எவ்வளவு சம்பளம் வழங்கியது என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம்: டெக் மகேந்திரா நிறுவனம் தாக்கல் செய்திருக்கக்கூடிய 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குனராகவும் பொறுப்பு வகிக்கக்கூடிய மோஹித் ஜோசி 52.1 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார் என தெரிவித்துள்ளது. 52.1 கோடி ரூபாய் என்பது அவருடைய ஆண்டு சம்பளம். இதன்படி பார்த்தால் அவர் ஒரு மாதத்திற்கு 4.34 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கி இருக்கிறார் அதுவே ஒரு நாளைக்கு என வரும்போது கிட்டத்தட்ட 14.47 லட்சம் ரூபாயை அவர் சம்பளமாக வாங்கி இருப்பது தெரிய வருகிறது.

ஒரு நாளைக்கு ரூ.14.47 லட்சம் ஊதியமாக பெற்ற இந்திய டெக் நிறுவனத்தின் CEO...

அதிக சம்பளம் வாங்கும் CEO: இது டெக் மகேந்திரா நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 840 மடங்கு அதிகமாகும். மோஹித் ஜோசியின் சம்பளம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது குறித்த விவரங்களை டெக் மகேந்திரா வெளியிடவில்லை. ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய கீர்த்தி வாசனை விட மோகித் ஜோசி அதிக சம்பளம் வாங்குவது தெரிய வருகிறது.

சலில் பரேக்கிற்கு ரூ.80 கோடி சம்பளம்: டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கீர்த்தி வாசன் 2025 ஆம் நிதி ஆண்டில் 26.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இது கடந்தாண்டை விட 4.6 சதவீதம் அதிகம். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் சலில் பரேக் 80 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இது அதற்கு முந்தைய ஆண்டு விட 22 சதவீதம் அதிகமாகும் . விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கக்கூடிய ஸ்ரீநிவாஸ் பல்லையா கடந்தாண்டை விட 10 சதவீதம் கூடுதலாக சம்பளம் பெற்று 2025ஆம் நிதி ஆண்டில் 53.6 கோடி ஊதியமாக பெற்றிருக்கிறார்.

அதிக சம்பளம் வாங்கும் CEO யார்?: இந்தியாவிலேயே ஐடி துறையில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அதிக சம்பளம் வாங்கக்கூடிய நபராக இருப்பவர் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் விஜயகுமார். இவர் 84.16 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருக்கிறார். மோஹித் ஜோசி டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2023 மார்ச் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கான அடிப்படை ஊதியமாக 6.5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது தவிர அவருக்கு பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன ஆண்டுதோறும் அவருக்கு பெர்பார்மன்ஸ் போனஸ் மற்றும் நிறுவன பங்குகளில் கணிசமான அளவு போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவே அவருக்கு கிடைக்கும் ஒட்டு மொத்த ஊதியம் அதிகரிக்க காரணம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+