இந்திய தொழில் துறையின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான வினீத் நாயர் அவர்கள் வியாழக்கிழமை அன்று 85 வயதில் காலமானார். அவரது நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் என உலகெங்கிலும் உள்ளவர்கள் வினீத் நாயர் குறித்து இரங்கல் பதிவை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது பணி வாழ்க்கையில், இந்திய அரசு, சர்வதேச பன்னாட்டு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில், பல நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

உலக வங்கியில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய அவர், இந்திய அரசின் கீழ் இயங்கும் "கேஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா" GAIL நிறுவனத்தை நிறுவி, அதன் நிர்வாக இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவராக இருந்த போது தான் இவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.
வினீத் நாயரின் மறைவு செய்தியை அறிந்த அவரது நண்பரும், முன்னாள் டெக் மஹிந்திரா நிர்வாக இயக்குநருமான சி.பி. குர்னானி டிவிட்டரில் மனம் திறந்து பதிவிட்டு உள்ளார். "வினீத் நாயரின் மறைவு செய்தியை அறிந்து எனது இதயம் உடைந்து போனது.. இந்தியா தனது சிறந்த தலைவர்களில் ஒருவரை இன்று இழந்துவிட்டது.. தனிப்பட்ட முறையில் எனக்கு பல தசாப்தங்களாக வழிகாட்டிய ஒளியை இழந்தது போல் உள்ளது.. வினீத் நாயர் எனக்கு நண்பர், தத்துவஞானி, சகோதரர், வழிகாட்டி மற்றும் சிறந்த தலைவர். ரேவா மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். #ஓம்சாந்தி," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலையாய அமைப்பான நாஸ்காம் (Nasscom) அமைப்பும் வினீத் நாயரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. டெக் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் வினீத் நாயரை "இந்திய தொழில் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க ஆளுமை" என்று பாராட்டி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வினீத் நாயரின் மறைவு இந்திய தொழில் துறைக்குப் பேரிழப்பு. அவரது பங்களிப்பையும், தொலைநோக்கு பார்வையையும் என்றும் நினைவு கொள்வோம் எனவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டு இருந்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications