இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெக் மஹிந்திரா சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கியது மூலம் மஹிந்திரா குழுமம் ஐடி சேவை துறைக்குள் நுழைந்தது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் உதவியுடன் மஹிந்திரா குழுமம் வர்த்தகத்தில் டெக் மேம்பாடுகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் கடந்த 15 வருடமாக டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலிலேயே உள்ளது.
டெக் மஹிந்திரா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியான சிபி குர்னானி இப்பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி மஹிந்திரா & மஹிந்திரா நிர்வாக குழு பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

சிபி குர்னானி வெளியேற்றத்தை தொடர்ந்து Tech Mahindra-வின் உயர்மட்ட நிர்வாகம் மொத்தமும் பள பளவென மாற உள்ளது, இதனால் டெக் மஹிந்திரா டிசம்பர் 20 முதல் புதிய வேகத்துடன் செயல்படும் என அனைவராலும் நம்பப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் பதவிகளில் 3 முக்கியமானவர்களை போட்டி நிறுவனத்தில் இருந்து சேர்க்கப்பட்டு உள்ளது.
செவ்வாய்க்கிழமை Tech Mahindra-வின் புதிய தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக பீயுஷ் துபே பணியில் சேர்ந்தார். இதற்கு முன்பு சமீபத்தில் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலுக்குள் வந்த LTIMindtree நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இப்புதிய பதவியேற்பு குறித்து பீயுஷ் துபே தனது டிவிட்டர் பக்கத்தில் டெக் மஹிந்திராவின் CMO ஆக இணைந்துள்ளேன். டெக் மஹிந்திராவின் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார்.
இதேபோல் ஆகஸ்ட் மாதம் டெக் மஹிந்திராவின் புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரியாக அதுல் சோனேஜா நியமிக்கப்பட்டார், இதற்கு முன்பு அதுல் சோனேஜா CitiusTech-ன் சிஓஓ ஆக இருந்தார், இதற்கு முன் இன்போசிஸ் மற்றும் அதன் கிளை நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்துள்ளார்.
ஏற்கனவே மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போல் டெக் மஹிந்திரா-வின் புதிய நிர்வாக இயக்குநராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டார். இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான நிதியியல் சேவை பிரிவின் தலைவர் ஆவார். இன்போசிஸ் நிறுவனத்தில் மோஹித் ஜோஷி சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இன்போசிஸ் மோஹித் ஜோஷி, CitiusTech அதுல் சோனேஜா, LTIMindtree பீயுஷ் துபே என CXO பிரிவில் முக்கிய பதவிகளில் 3 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் டாப் 5 இடத்தில் மீண்டும் போட்டி அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே விப்ரோ நிறுவனத்தில் அதிகப்படியான தடுமாற்றம் இருப்பதை மறக்க கூடாது.
இதன் மூலம் டெக் மஹிந்திராவின் புதிய டீம் இந்நிறுவனத்தை அடுத்த 3 வருடத்திற்குள் LTIMindtree, விப்ரோ ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் உள்ள. ஆனால் இந்த புதிய டீம்-க்கு சந்தையில் புதிய வர்த்தகத்தை பெறுவதில் எண்ணில் அடங்காத சவால்கள் உள்ளது என்பதையும் மறக்க கூடாது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications