ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. டெக் மகேந்திரா குழும நிறுவனத்தின் அறிவிப்ப பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையானது நல்லதொரு வளர்ச்சியினை கண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக ஐடி துறையில் தொடர்ந்து பணியமர்த்தலானது அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த சில காலாண்டுகளாக தொடர்ந்து பணியமர்த்தலானது அதிகரித்து வருகின்றது.

இது இனி வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றனர். ஐடி துறை சார்ந்த நிபுணர்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த போக்கு தொடரலாம் என கூறி வருகின்றனர்.

வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப் டக்கரு.. டிசிஎஸ்-க்கு ரூ.1,146.7 கோடி இழப்பு..! வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப் டக்கரு.. டிசிஎஸ்-க்கு ரூ.1,146.7 கோடி இழப்பு..!

பணியமர்த்தல் திட்டம்

பணியமர்த்தல் திட்டம்

இதற்கிடையில் ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும் வகையில், அட்ரிஷன் விகிதமும் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல நிறுவனங்களும் தொடர்ந்து பணியமர்த்தலை செய்து வருகின்றன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பெரியளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. சொல்லப்போனால் கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

கோம்விவா திட்டம்

கோம்விவா திட்டம்

இதற்கிடையில் டெக் மகேந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான கோம்விவா நிறுவனம், ஜூலை 2022க்குள் சுமார் 600 பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையினை ஈடுகட்டவும், அட்ரிஷன் விகிதத்தினை ஈடுகட்டவும் இந்த பணியமர்த்தல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டயர் 2 நகரங்களில் கவனம்

டயர் 2 நகரங்களில் கவனம்

இந்த நிறுவனம் தற்போது டயர் 2 நகரங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. தற்போது அதன் புபனேஷ்வர் செண்டரை விரிவாக்கம் செய்து வருவதாகவும், கோம்விவா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோரஞ்சன் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

600 பேர் பணியமர்த்தல்

600 பேர் பணியமர்த்தல்

நாங்கள் சுமார் 2,000 பேர் உள்ள உறுப்பினர்கள் குழு. ஆண்டுக்கு 600 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் சுமார் 300 பேர் கேம்பஸ் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தவும், இவர்கள் சந்தையில் 200- 300 பேர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

இந்த நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் முன்னதாக 15 -16% ஆக இருந்த நிலையில், தற்போது 20 - 23% ஆக அதிகரித்துள்ளது.

புபனேஷ்வரில் தற்போது 20 பேருக்கும் குறைவாகத் தான் இருக்கிறோம். இதனால் தற்போது பணியமர்த்தலை தொடங்கியுள்ளோம். இது மார்ச் 31, 2022க்குள் முடிவடையலாம் என எதிர்பார்க்கிறோம். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 60 - 70 பேர் இருப்பார்கள். இது இரண்டு ஆண்டுகளில் 200 - 300 பேர் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

நடப்பு நிதியாண்டில் நிறுவனம் 10 - 12% வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கிறது. 2021ம் நிதியாண்டில் கோம்விவா 845.1 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியிருந்தது.

கோம்விவா நிறுவனம் மொபைல் சாதனங்கள் சார்ந்த சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் கோம்விவா கவனம் செலுத்தி வருகின்றது.

 ஆப்கள்

ஆப்கள்

புபனேஷ்வரில் மொபைல் சாதனங்களுக்கான சிறந்த மையத்தை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 18 -24 மாதங்களில் எங்கள் மொபைல் பேமெண்ட்கள், சூப்பர் ஆப், வணிகர் பயன்பாடு, நுகர்வோர் ஆப், செல் கேர் ஆப் உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra group plans to hire 600 engineers by next July

Tech Mahindra group plans to hire 600 engineers by next July/ ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. டெக் மகேந்திரா குழும நிறுவனத்தின் அறிவிப்ப பாருங்க.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X