டெக் மஹிந்திரா நிறுவனம் ஓமனில் உள்ள மஸ்கட்டில் இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி டெவலப்மென்ட் மையத்தினை தொடங்கியுள்ளது.
டெக் மஹிந்திராவின் இந்த பிரம்மாண்ட மையமானது தொலைத் தொடர்பு துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ், எனர்ஜி & பயன்பாடுகள், பொதுத்துறை நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா & அனலிடிக்ஸ், கிளவுட், 5ஜி டெக்னாலஜிஸ் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியினை மேம்படுத்தும்
டெக் மஹிந்திராவின் இந்த மையம் புனேவை தலைமையிடமாக கொண்ட மையத்துடன் ஒத்து போவதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் மற்றும் சமூகம், பொருளாதாரம் மற்றும் மேம்பாடு, ஆட்சி மற்றும் நிறுவனங்களின் செயல் திறன்களை அடிப்படையாக கொண்ட ஓமனின் பார்வை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் என நான் நம்புகிறேன்.
முக்கிய பங்கு
இது பெண்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கும். புதுமைகள் செழித்து வளரவும், இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என நாம் நம்புகிறேன். இதில் டெக் மஹிந்திராவின் பங்கு முக்கியமாக இருக்கும் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறேன் என டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாகியுமான சிபி குர்னானி கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும்
சர்வதேச அளவில் திறமைகளை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்களது முயற்சி ஓமனில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்ப மையம் ஓமனில் திறமையை மேம்படுத்தும், இதனை உலகளாவிய சந்தைக்கு விரிவாக்கம் செய்ய எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.
வலுப்படுத்த உதவும்
ஏற்கனவே டெக் மஹிந்திரா ஓமனில் தனது கால் தடத்தினை பதித்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள டெக் மையம் மேற்கொண்டு ஓமனில், டெக் மஹிந்திராவின் இருப்பினை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல சேவைகள்
மேலும் டெக் மஹிந்திரா, Maker's Lab என்ற ஆர் &டி பிரிவையும் மையத்தினுள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் மாற்றம், ஸ்மார்ட் நிறுவன தீர்வுகள், கிளவுட் பரிமாற்றம், IPs, மற்றும் தீர்வுகள் மற்றும் சேவைகள் என பல சேவைகளிலும் இது கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .


Click it and Unblock the Notifications