இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா புதன்கிழமை தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது மட்டும் அல்லாமல் டெக் மஹிந்திரா-வின் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ள மோஹித் ஷர்மா-வுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறது.
டெக் மஹிந்திரா புதன்கிழமை ஏமாற்றமளிக்கும் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 31 உடன் முடிந்த 3 மாத காலத்தில் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 61% சரிந்து வெறும் 510 கோடியாக உள்ளது. லாபத்தில் 61% சரிவு என்பது டெக் மஹிந்திரா ஊழியர்கள் மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது.

மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் கிட்டத்தட்ட 5% குறைந்து 13,101 கோடி ரூபாயாக உள்ளது. நிலையான நாணய மதிப்பீட்டில் வருவாய் அளவு செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 1.1 சதவீதம் வளர்ச்சியிலும், வருடாந்திர அடிப்படையில் 5.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் டெக் மஹிந்திரா சுமார் 381 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது, இது செப்டம்பர் காலாண்டில் 640 மில்லியன் டாலராகவும், கடந்த டிசம்பர் காலாண்டில் 795 மில்லியன் டாலராகவும் இருந்தது.
பிற ஐடி நிறுவனங்களுக்கு BFSI பிரிவில் இருந்து தான் அதிகப்படியான வருவாய் கிடைக்கும் வேளையில் டெக் மஹிந்திராவுக்குக் கம்யூனிகேஷன் மற்றும் மீடியா அதிகப்படியான வருவாயை ஈட்டுகிறது. இப்பிரிவில் வருவாய் டெக் மஹிந்திராவுக்கு 13.4 சதவீதம் குறைந்து உள்ளது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.
பிராந்திய அடிப்படையில் அமெரிக்காவில் இருந்து வருவாய் 1.6 சதவீதம் சரிந்துள்ளது, ஐரோப்பாவில் 8.3 சதவீதம் சரிவு. பிற சந்தைகளில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது. EBIT மார்ஜின் அளவு 0.70 சதவீதம் மட்டுமே வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது, காலாண்டு அடிப்படையில் 5.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டெக் மஹிந்திராவின் அட்ரிஷன் அளவு 11 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது, மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,46,250 ரூபாயாக உள்ளது. இக்காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 4,354 பேர் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications