இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா, அதன் பணியாளர் எண்ணிக்கையை 4-வது காலாண்டில் குறைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 1757 ஊழியர்களை குறைத்தது. இந்நிறுவனம் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 4-வது காலாண்டு மட்டுமல்லாமல் 3-வது காலாண்டிலும் டெக் மஹிந்திரா நிறுவனம் தனது பணியாளர் எண்ணிக்கையை குறைத்தது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் டெக் மஹிந்திரா நிறுவனம் 3276 ஊழியர்களை அதிகமாக பணியமர்த்தியது. இதனால் 2.3 சதவீதம் ஊழியர் எண்ணிக்கை அதிகரித்தது. 2025-ஆம் நிதியாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,48,731-ஆக இருந்தது. அதேபோல டெக் மஹிந்திரா நிறுவனத்திலிருந்து வெளியேறிய பணியாளர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் 11.2 சதவீதமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் 11.8 சதவீதமாக அதிகரித்தது.

டெக் மகேந்திரா நிறுவனம் கடந்த நிதியாண்டில் 6000-த்திற்க்கும் அதிகமான பட்டதாரிகளை பணியமர்த்த இலக்கு நிர்ணயித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக 6,100-க்கும் அதிகமான மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுத்தது. ஆனால் தற்போதைய மந்தமான சந்தை நிலவரத்தின் காரணமாக 2026-ஆம் நிதியாண்டுக்கு புதிய பணியாளர் நியமன இலக்கு குறித்து எந்தவித தகவலையும், நிறுவனம் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மோஹித் ஜோஷி நடப்பு நிதியாண்டில் பணியமர்த்தல் செயல்முறை தேவையை பொருத்தே இருக்கும் என்றும், இப்போது எவ்வளவு ஊழியர்களை பணியமர்த்த இருக்கிறோம் என்ற தகவல்கள் தங்களுக்கே தெரியவில்லை என்றும், காலப்போக்கில் அதிகளவிலான ஊழியர்களை பணியமர்த்த எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் பிற ஐடி சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், HCL டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பணியாளர் எண்ணிக்கையை குறைத்தது. இதனால் பணியாளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு 2024-ஆம் மிதியாண்டில் தோராயமாக 9,400 ஊழியர்களுக்கும் அதிகமாக பணியமத்தியுள்ளன.
2024-ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கூட்டாக நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கையை சமன் செய்யவில்லை. ஆனால் முன்பு இருந்ததை விட சற்று அதிகளவிலான ஊழியர்களை பணியமத்தியுள்ளன. ஏனெனில் 63,759-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த 4 நிறுவனங்களில் இருந்து வெளியேறினர். ஆனால் பணியமர்த்தல் செயல்முறையில் இன்னமும் மந்தமான நிலை தான் இருந்து வருகிறது.
ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களினால் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்தது. இதனால் பணியமர்த்தல் செயல்முறையும் மந்தமாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மாறுமா? அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications