இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் டெக் மஹிந்திரா-வின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா -வின் தற்போதைய CEO மற்றும் MD ஆக பணியாற்றி வரும் சிபி குர்னானி இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார்.
இவருடைய இடத்திற்கு பல மாதங்களாக புதிய நபரை தேடி வந்த டெக் மஹிந்திரா நிர்வாகம் மோஹித் ஜோஷி-ஐ நியமித்துள்ளது.
டெக் மஹிந்திரா பங்குகள்
மோஹித் ஜோஷி-யின் நியமன அறிவிப்பு வீக்கென்ட்-ல் வெளியான நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 சதவீதம் வரையில் உயர்ந்து 1,164 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. 1 மணியளவில் டெக் மஹிந்திரா பங்குகள் 7.60 சதவீதம் உயர்ந்து 1,141.90 ரூபாயாக உள்ளது.
புதிய சிஇஓ
புதிய சிஇஓ நியமனம் மூலம் டெக் மஹிந்திராவின் வளர்ச்சியின் வேகம் பெரிய அளவில் அதிகரிக்கும், இதேபோஸ் டிஜிட்டல் பிரிவு சேவைகளில் மோஹித் ஜோஷி தலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனுடைய தாக்கம் தான் இன்று பங்குச்சந்தையில் பதிவான உயர்வு.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்களை ஒப்பிடுகையில் டெக் மஹிந்திரா நிதானமான வேகத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மோஹித் ஜோஷி நியமனம் மூலம் உடனடியாக மாற்றம் ஏற்படாது என்பதால் Medium Term-ல் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதனால் டெக் மஹிந்திரா பங்குகளுக்கு தொடர்ந்து HOLD ரேட்டிங் இருக்கிறது.
மோஹித் ஜோஷி இன்போசிஸ்
மோஹித் ஜோஷி இன்போசிஸில் நிதிச் சேவைகள் மற்றும் ஹெல்த்கேர், லைப் சையின்ஸ் வர்த்தகங்களை நிர்வாகம் செய்து வருகிறார். இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பிரிவுகளும் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய பிரிவுகள், இவருடைய வெளியேற்றத்தை ஈடு செய்ய இன்போசிஸ் நியமிக்கும் முக்கிய அதிகாரி அல்லது அதிகாரிகள் யார்..?
5 ஆண்டுகள்
மோஹித் ஜோஷி டிசம்பர் 20, 2023 முதல் டிசம்பர் 19, 2028 வரை 5 ஆண்டுகளுக்கு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டெக் மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடைசி நாள்
மோஹித் ஜோஷி இன்போசிஸ் நிறுவனத்தில் கடைசி நாள் ஜூன் 9 என்று இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 9 முதல் டிசம்பர் 20 வரையில் விடுமுறையில் இருப்பார் என தகவல் வெளிவந்தாலும், ஜூன் மாதத்திலேயே இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோஹித் ஜோஷி இன்போசிஸ்
மோஹித் ஜோஷி இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தனது தலைவர் பதவியை மார்ச் 11 ஆம் தேதி ராஜினாமா செய்து 5வது இடத்தில் இருக்கும் டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக பதிவியேற்க உள்ளார். டிசம்பர் 19 தான் தான் சிபி குர்னானி-க்கு கடைசி நாளாக இருந்தாலும் முன்கூட்டியே இணைவது மூலம் நிர்வாகத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications