இந்திய ஐடி துறை பல தடுமாற்றங்களைச் சந்தித்து வந்தாலும் தொடர்ந்து அதிக வேலைவாய்ப்புகளையும், அதிகப்படியான சம்பளம் அளிக்கும் துறையாகவும் உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஆட்டோமொபைல், மொம்பை, டெக்ஸ்டைல், எலக்ட்ரிக் வாகனம் எனப் பல துறைகளை முக்கியமானதாகக் கருதி பணியாற்றினாலும் அனைத்தும் மாநிலத்திலும் ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வரவேற்பும், டிமாண்ட்-ம் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முக்கியமான ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெக் மஹிந்திரா குஜராத் மாநிலத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய ஐடி சேவை
இந்திய ஐடி சேவை துறைக்குத் தற்போது அதிகளவில் பலன் அளிப்பது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் திட்டங்கள் தான். இந்த நிலையில் டெக் மஹிந்திரா நிறுவனம் டிஜிட்டல் இன்ஜினியரிங் பிரிவில் சேவை அளிக்கக் குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
குஜராத் மாநில அரசு
இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம் குஜராத் மாநிலத்தில் தனது வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிதாக 3000 டெக் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடுத்த 5 வருடத்தில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது டெக் மஹிந்திரா.
ஐடி துறை
குஜராத் மாநில அரசு Employment Generation Incentive (EGI) மற்றும் ஆத்மநிர்பர் குஜராத் சஹய் யோஜனா திட்டத்தின் கீழ் ஐடி துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
15 ஒப்பந்தங்கள்
இந்த 15 ஒப்பந்தங்கள் மூலம் அடுத்தச் சில வருடத்தில் குஜராத் மாநிலத்தில் சுமார் 26,750 பேருக்கு ஐடி துறையில் குஜராத் மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த 15 ஒப்பந்தத்தில் டெக் மஹிந்திராவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சிபி குர்னானி
டெக் மஹிந்திரா தனது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் வர்த்தகப் பிரிவில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தச் சிறப்பு வாய்ந்த cutting-edge digital engineering services தளம் பெரிய அளவில் உதவும் என டெக் மஹிந்திரா சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் சிபி குர்னானி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications