இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா பல புதிய துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பிளாக்செயின் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வரும் டெக் மஹிந்திரா NFT மார்கெட்பிளேஸ் தளத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
டெக் மஹிந்திரா NFT
இந்தியா முழுவதும் கிரிப்டோகரன்சியில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில், NFT பிரிவிலும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது, இதை உணர்ந்த டெக் மஹிந்திரா NFT வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
NFT மார்கெட்பிளேஸ்
உலக நாடுகளில் NFT மூலம் பல டிஜிட்டல் சொத்துக்கள் விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவில் பிரபலங்களை ஈர்க்கும் திட்டத்தோடு டெக் மஹிந்திரா இந்தப் புதிய NFT மார்கெட்பிளேஸ் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பொதுவாகவே மார்கெட்பிளேஸ் என்றால் அமேசான், பிளிப்கார்ட் போன்று விற்பனையாளர்களையும், நுகர்வோரையும் ஓரே இடத்தில் சேர்க்கும் இடம் தான் மார்கெட்பிளேஸ்.
கிரியேட்டர் மற்றும் பிரபலங்கள்
இதேபோன்று டெக் மஹிந்திரா NFT-க்காகக் கிரியேட்டர் மற்றும் பிரபலங்களை இணைக்கும் தளத்தை உருவாக்கி அதன் மூலம் டிஜிட்டல் ஆரட் அல்லது நினைவுச் சின்னங்களை விற்பனை செய்யும் தளமாக இது இருக்கும் என இந்நிறுவனத்தின் பிளாக்செயின் மற்றும் சைபர் செக்யூரிட்டி டொமைன் பிரிவு துணை தலைவர் ராஜேஷ் துட்டுத் தெரிவித்துள்ளார்.
பிளாக்செயின்
Non-fungible tokens என்பதன் சுருக்கம் தான் NFT என அழைக்கப்படுகிறது, இந்த NFT வாயிலாக ஒரு ஓவியம், ஆடியோ, அல்லது பிற டிஜிட்டல் சொத்துக்களைத் தனிப்பட்ட டிஜிட்டல் இணைப்பிற்குள் சேர்ந்து அதைப் பிளாக்செயின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.
டிவிட்டர் ஜாக் டோர்சி
டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சி தனது முதல் டிவீட்டை NFT மூலம் விற்பனை செய்தார், எலான் மஸ்க் ஒரு மியூசிக்-ஐ விற்பனை செய்தார், ஏன் இந்தியாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக NFT வெளியிட்டார்.
டிஜிட்டல் சொத்துக்கள்
இப்படிப் பல பிரபலங்களை NFT மூலம் டிஜிட்டல் ஆரட், மியூசிக், புகைப்படம் அல்லது நினைவுச் சின்னங்களை விற்பனை செய்ய இப்புதிய தளத்தின் மூலம் ஈர்க்க உள்ளது டெக் மஹிந்திரா, இது கிட்டதட்ட ஒரு டிஜிட்டல் ஏல கடை என்றாலும் மிகையில்லை.
9 பில்லியன் டாலர்
உலகளவில் 2021ல் NFT மூலம் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்கள் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 25 மடங்கு அதிகமாகும். இந்த வேகமாக வளரும் துறையில் டெக் மஹிந்திரா NFT மார்கெட்பிளேஸ் தளத்தை மட்டும் அல்லாமல் பிளாக்செயின் உதவியுடன் வேகமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கிளியரென்ஸ் ப்ரேம்வொர்க்-ஐ உருவாக்க உள்ளது.


Click it and Unblock the Notifications