இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருகிறது என்றால் மிகையில்லை.
கொரோனா காலத்தில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் புதிய முதலீடுகள் கிடைக்காத நிலையில் முதலீட்டாளர்கள் ஏற்கனவே வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
லாக்டவுன் காலம்
இதற்கு ஏற்றார் போல் லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் சேவைகளின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள காரணத்தால் டிஜிட்டல் சேவை பிரிவுகளில் இருக்கும் டாப் நிறுவனங்களின் வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
ஒருபக்கம் நிதிநிலையிலும், மறுபக்கம் வர்த்தகத்திலும் வலிமை அடைந்துள்ள இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்காக 10, 20, 30 வருடங்களாக வர்த்தகத்தில் இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.
டிஜிட்டல் கல்வி துறை
ஆன்லைன் கல்வி சேவைகள் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில், இத்துறையில் இந்தியாவின் டாப் நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் 10 வருடமாக மட்டுமே வர்த்தகத்தில் இருக்கும் வேளையில் 31 வருடமாகக் கல்வி துறையில் இயங்கி வரும் ஆகாஷ் எடுகேஷன் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
டிஜிட்டல் நிதியியல் சேவை துறை
இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவையில் வேகமாக வளரும் 5 வருடப் பழமையான Groww நிறுவனம் 13 வருடமாக இயங்கி வரும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மியூச்சவல் பண்ட் வர்த்தகம் முழுவதையும் சுமார்175 கோடி ரூபாய்க்கு Groww கைப்பற்ற உள்ளது.
Groww நிறுவனம் தற்போது 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. மேலும் இதுவரை இந்நிறுவனம் சுமார் 59 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கித் துறை
37 வருடமாக இயங்கி வரும் பிஎம்சி வங்கியை NBFC நிறுவனமான சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனமான பாரத்பே ஆகிய இரு தரப்பும் இணைந்து கைப்பற்ற உள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் கடன் மோசடியில் சிக்கியுள்ள காரணத்தால் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎம்சி வங்கிக்குத் தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது.
ஆன்லைன் பார்மா துறை
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் பார்மா துறை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 10 வருடமாக ஆன்லைன் பார்மா துறையில் இயங்கி வரும் பார்மாஈசி நிறுவனம் 24 வருடமாக இயங்கி வரும் தைரோகேர் நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெரும் நிறுவனங்கள் குழுமங்கள்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் தளத்தில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் ரீடைல் சந்தைக்குள் நுழைய வேண்டும் என நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இருக்கும் பெரும் நிறுவனங்களான டாடா குரூப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் துறைக்குள் நுழைய வேண்டும் என டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications