அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில், அனைத்து மக்கள் மத்திலும் ராமர் புகழையும், ராமர் கோயில் புகழையும் கொண்டு சேர்க்க சினிமா, விளையாட்டு, அரசியல், வெளிநாட்டுத் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பைப் பெற்று அயோத்திக்கு நேற்று மாலை முதல் பிரபலங்களின் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி அயோத்தியில் தரையிறங்கியது முதல் அனைத்து பிரபலங்களும் X, இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களுடைய புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

ZOHO தமிழ்நாட்டின் மிகப்பெரிய SAAS நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு தனது, தாய் மற்றும் குடும்பத்தாருடன் 21 ஆம் தேதியே அயோத்திக்குச் சென்றுள்ளார். ஸ்ரீதர் வேம்பு-வின் தாய் நீண்ட காலமாக ராமர் பக்தர் என்பதால் இந்த முக்கியமான நிகழ்வுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதேபோல் ராமர் கோயில் திறப்பு மூலம் பெரும் வர்த்தகத்தைப் பார்க்கப்போகும் OYO நிறுவனத்தின் தலைவர் ரிதேஷ் அகர்வால் X தளத்தில், கதவுகள் திறக்கப்பட்டது, கோயிலுக்குள் நிற்கிறேன். இது வரலாற்று நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவி நீதா அம்பானி ஆகியோர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலுக்கு ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் இது ஒரு வரலாற்று நாள் என்கிறார் நீதா அம்பானி, இன்று ராமர் வருகிறார், ஜனவரி 22 ஆம் தேதி நாடு முழுவதும் ராமர் தீபாவளியாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
மேலும் ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான அர்சல்லார் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல், பாலிவுட் சூப்பர் ஸ்டால் அபிதாப் பச்சன், அவருடைய மகன் அபிஷேக் பச்சன், அனில் அம்பானி ஆகியோர் அருகில் அமர்ந்திருந்த புகைப்படம்.

மேலும் முகேஷ் அம்பானி தனது இருக்கையில் உட்காருவதற்கு முன்பு அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கையில், சூப்பர்ஸ்டார் ரஜினியை பார்த்த உடன், சார் நீங்களா என அச்சரியத்துடன் கைகூப்பி வணங்கிய கை கொடுத்தார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி அவரைக் கவனித்ததை உணர்ந்து உடனே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கையில் இருந்து எழுந்து கைகொடுத்தார். இதை அனைத்தையும் இருவருக்கும் நடுவில் நின்றுகொண்டு கிரிக்கெட் உலகின் கடவுளான சச்சின் டென்டுலகர் பார்த்துக்கொண்டு இருந்தார்.
இவர்களைத் தொடர்ந்த EaseMyTrip இணை நிறுவனர் நிஷாத் பிட்டி, பார்தி எண்டர்பிரைசர்ஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல், எனப் பல தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். முக்கியமாகப் பாலிவுட் மற்றும் தமிழ் தாம்தூம் படத்தின் நடிகை கங்கனா ரனாவத் ராமர் கோயில் திறப்பை கத்தி கொண்டாடி தீர்த்தார்.



Click it and Unblock the Notifications