இந்திய ஐடி நிறுவனங்கள் சவாலான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் கடுமையான விசா நடவடிக்கைகள், ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் வளர்ச்சி , அமெரிக்க பொருளாதாரம் மந்தமாக இருப்பது என அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த பொருளாதார சூழல்கள் காரணமாக இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ,டெக் மகேந்திரா ஆகியவற்றில் ஒட்டு மொத்தமாகவே புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 17ஆக இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த ஐடி நிறுவனங்கள் லாபத்தையும் ஈட்டியாக வேண்டும், ஊழியர்களையும் தக்கவைத்தாக வேண்டும், இருக்கின்ற ஊழியர்களுக்கு நவீன திறன் பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

இந்த ஐந்து ஐடி நிறுவனங்கள் கடந்து 9 மாதங்களில் வெறும் 17 பேரை மட்டுமே புதிதாக வேலைக்கு அமர்த்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஊழியர்கள் பணி அமர்த்தலில் நிறுவனங்கள் மிக கவனமாக செயல்படுவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் இந்தியாவின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்கள் 17,764 பேருக்கு வேலைவாய்ப்பு தந்து இருந்தன. ஆனால் தற்போது அது வெறும் 17ஆக குறைந்திருக்கிறது.
ஐடி நிறுவனங்களின் இந்த போக்கு புதிதாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு சந்தையில் நுழையக்கூடிய மாணவர்களுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ் தான் மிக மோசமான செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 25,816 ஊழியர்கள் டிசிஎஸ்-இல் இருந்து வெளியேறியுள்ளனர். குறிப்பாக மிட் ன் லெவல் மற்றும் சீனியர் லெவல் எக்ஸிகியூடிவ் பணியில் இருந்தவர்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே வேளையில் இன்போசிஸ் நிறுவனம் 13,456 பேரையும் விப்ரோ 9740 பேரையும், ஹெச்சிஎல் டெக் 1885 பேரையும் டெக் மகேந்திரா 752 பேரையும் புதிதாக வேலைக்கு சேர்த்து இருக்கிறது. டாப் 5 ஐடி நிறுவனங்கள் என கணக்கிட்டால் டிசிஎஸ்-இன் செயல்பாட்டால் ஒட்டு மொத்தமாக புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 17ஆக உள்ளது.
டிசம்பர் மாத காலாண்டில் மட்டும் இந்தியாவின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 2,174 பேர் குறைந்துள்ளனர். குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டும் இது 11,151 ஆக இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ் தவிர மற்ற நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களே பணிக்கு அமர்த்தி தான் வருகின்றன. டிசிஎஸ் செயல்பாடு ஒட்டுமொத்த ஐடி துறையையே பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் ஐடி செலவினங்களை குறைத்தது, ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்டவை காரணமாக நிறுவனங்கள் பெரிய அளவில் தங்களை மறுக்கட்டமைப்பு செய்து வருவதே இந்த நிலைக்கு காரணம் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications