ஒரு நிகழ்ச்சியில் தண்ணீர் பாட்டில் ஒன்றுக்கு அதிக தொகை வசூலித்ததாக சொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக டெக்கி ஒருவர் கண்டனம் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். பல்லாப் என்ற டெக்கி தனது X பதிவில் 10 ரூபாய்க்கு கிடைக்கிற தண்ணீர் பாட்டிலை சொமேட்டோ நிறுவனம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததற்காக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாத இசை நிகழ்ச்சிகளில் சொமேட்டோ நிறுவனம் 10 ரூபாய் தண்ணீர் பாட்டிலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்று எக்ஸ் பையனரான பல்லாப் கேள்வி எழுப்பி போஸ்ட் செய்திருந்தார். அதோடு இரண்டு தண்ணீர் பாட்டில்களை வாங்கியதற்காக தான் செய்த கட்டணத்தின் புகைப்படத்தையும் X-இல் பகிர்ந்திருந்தார். அதோடு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞரையும் டேக் செய்து இந்த போஸ்டை பதிவு செய்திருந்தார். இவருடைய போஸ்டுக்கு கடும் விவாதம் எழுந்தது.

சொமேட்டோ நிறுவனத்தின் பதில்: பல்லாப் பகிர்ந்த போஸ்டின் கமெண்ட்ஸ் செக்ஷனில் சொமேட்டோ நிறுவனம், "ஹாய் பல்லாப்! உங்களுடைய இந்த அனுபவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. நாங்கள் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் பார்ட்னர். உங்களுடைய ஃபீட்பேக்கை கருத்தில் கொண்டுள்ளோம். மேலும் எதிர்கால நிகழ்ச்சிகளில் உங்களுடைய ஃபீட்பேக் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்" என்று பதிலளித்திருந்தது.
அதோடு பல்லாப் தான் வாங்கிய பாட்டிலின் புகைப்படத்தையும் பகிர்ந்து பாட்டிலில் 10 என்று எழுதப்பட்ட எம்ஆர்பி நன்றாக தெரிவது போல போஸ்ட் செய்திருந்தார். இவருடைய போஸ்டுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் குவிய தொடங்கியது. பெரும்பாலானோர் பல்லாபின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்திருந்தனர். சிலர் இது வெளிப்படையான திருட்டு.. அனைவரும் இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

MRP விலை என்றால் என்ன?: MRP என்பது அதிகபட்ச சில்லறை விலையை குறிக்கிறது. இந்தியாவில் நுகர்வோர் ஒரு பொருளை பெறக்கூடிய மிக உயர்ந்த விலை இதுவாகும். இது அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். மேலும் ஒரு தயாரிப்பின் பேக்கேஜிங்கில் தெளிவாக இது குறிப்பிடப்பட்டிருக்கும். சட்டத்தின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில்லறை விற்பனையாளர்கள் எம்ஆர்பியை விட அதிக விலையில் வசூலிக்க முடியாது. இந்தியாவில் எம்ஆர்பி விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது. ஒரு கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகம் வசூலித்தால் அது குறித்து நுகர்வோருக்கு புகார் அளிக்க உரிமை உண்டு.


Click it and Unblock the Notifications