படிச்ச படிப்புக்கே வேலை இல்ல! ஆனா ரூ.44,000 சம்பளம் பெறும் ஹவுஸ் ஹெல்பர்! வாயடைத்து போன IT ஊழியர்!

சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், அவர் வீட்டில் சமையல் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடந்த உரையாடல் தான் இப்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. கடின உழைப்பும், விடா முயற்சியும் என்றைக்கும் ஒருவரை கீழே தள்ளாது என்பதற்கு சான்றாய் சமீபத்தில் X தளத்தில் ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பார்த்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர். என்ன நடந்தது என்று பார்ப்போமா?

ஆதித்யா என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார். அவர் சில நாட்களாக வேலைக்கு தாமதமாக வந்திருக்கிறார். இதை பார்த்த ஆதித்யா ஏன் லேட்டா வரீங்க? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் கொடுத்த பதில் தான் ஆதித்யாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த நெட்சன்களையும் வாயடைக்க வைத்தது.

அப்படி என்ன சொன்னார் அந்த பெண்?: வீட்டு வேலைகளை தவிர, தான் குடியிருப்புகளில் வசிக்கும் 4 பட்டதாரிகளுக்கு உணவு சமைப்பதாக தெரிவித்தார். இதனால் ஒவ்வொருவரிடமிருந்து மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறதாம். இதன் மூலம் மட்டுமே மாதத்திற்கு 24,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இதை தவிர இரண்டு குடும்பங்களுக்கு வீட்டில் வேலை செய்து கொடுத்து ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000 பெறுகிறார். இதனால் மாதத்திற்கு ரூ.20,000 கிடைக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் அவருடைய மாத வருமானம் 44,000 ரூபாயாக இருக்கிறது. அப்படியானால் ஆண்டு வருமானம் ரூ.5.28 லட்சம். அந்த பெண்ணின் பதிலைக் கேட்ட ஆதித்யாவுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி போனது. பிறரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக X தளத்தில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்திருந்தார்.

படிச்ச படிப்புக்கே வேலை இல்ல! ஆனா ரூ.44,000 சம்பளம் பெறும் ஹவுஸ் ஹெல்பர்! வாயடைத்து போன IT ஊழியர்!

இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான படித்த பட்டதாரிகளே வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் உண்மையிலேயே கிரேட் எனக் கூறி அந்த பெண் சொன்ன பதிலை பகிர்ந்திருந்தார். எந்த வேலையும் குறைத்து மதிப்பிட கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஆதித்யாவின் போஸ்ட் சட்டென பரவத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் இருக்கும் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் எல்லாம் கமெண்ட் செக்ஷனில் குவிய தொடங்கியது. அதில் ஒருவர் "இன்று நான் ஒன்றை உணர்ந்தேன், அது என்னவென்றால் எந்த வேலையும் குறைந்தது அல்ல. திறமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் எப்பொழுதும் நல்லதே நடக்கும்" என்று எழுதியிருந்தார். ஒரு சில நபர்களோ படித்த பட்டதாரிகளே மாதத்திற்கு 15,000 ரூபாய் பெற சிரமப்படும் சூழலில் 44,000 சம்பளம் பெறும் அந்தப் பெண் உண்மையிலேயே திறமைசாலி தான் என்று கூறியிருந்தனர்.

வெறும் ஏட்டு கல்வி மற்றும் வாழ்க்கை அல்ல. நம்முடைய நிதிநிலை மற்றும் கூடுதல் வருமானம் தரும் வழிகள் போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்தால் அவரவர் செலவுகளை நிர்வகிக்க போதுமான பணம் கிடைக்கும். ஆனால் அதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் கண்சிஸ்டெண்சி தேவை என்பதே இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+