டெக் உலகின் புரட்சிக் நாயகனாக விளங்கும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதில் இருந்து இதை சூப்பர் ஆப் ஆக மாற்றும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தேர்தல் பிரச்சாரம், ஸ்பேஸ்எக்ஸ் பணிகளுக்கு மத்தியில் எக்ஸ் தளத்தின் புதிய முயற்சிகளுக்கான பணிகள் மந்தமடைந்துள்ளது.
இதை தூசிதட்டும் வகையில் டிவிட்டரில் ஒரு பதிவு எலான் மஸ்க்-ஐ மீண்டும் தனது கவனத்தை எக்ஸ் தளத்தின் மீது திருப்பியுள்ளார். எக்ஸ்-ல் Nima Owji என்பவர் தனது கணக்கில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து @X.com என்ற டொமைனில் ஈமெயில் அட்ரஸ் எனக்கு கொடுத்தால் ஜிமெயில் பயன்படுத்துவதை நிறுத்தி விடுவேன் என தெரிவித்தார்.

இதற்கு நேரடியாக பதில் அளித்த எலான் மஸ்க், இன்டிரெஸ்டிங், ஆனால் எப்படி மெசேஜிங், ஈமெயில் ஆகியவை இயங்குகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இந்த பதவியை தொடர்ந்து டோஜ் டிசைனர் என்ற கணக்கில் Xmail சேவை வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என பதிவிட்டு இருந்தார். இதற்கும் எலான் மஸ்க், லிஸ்ட்டில் இதுவும் இருக்கு என பதிவிட்டு இருந்தார்.
எக்ஸ்மெயில் சேவை வருமா..? எப்போது வரும்..? என்பது போன்ற முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ஈமெயில் சேவையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு போட்டியாக எக்ஸ்மெயில் வரப்போகிறது.
இதன் மூலம் மின்னஞ்சல் சேவை துறையில் பெரும் மாற்றம் நிகழும், சமூக வலைதள அம்சங்களையும், மின்னஞ்சல் செயல்பாடுகளையும் இணைத்து தனித்துவமான அனுபவத்தை வழங்கக்கூடும் என்பதால் இது பெரும் புரட்சியாக இருக்கும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாகும், வேலைத்திறன் அதிகரிக்கும் மற்றும் பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கும்.
டிரம்ப் வெற்றிக்கு பின்: எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை உலகளாவிய பேமெண்ட் தளமாக மாற்றும் திட்டத்தை வைத்திருக்கும் நிலையில், இதற்கான ஒப்புதல் கிடைப்பதில் பெரும் தடை நிலவி வருகிறது. டிரம்ப்-ன் முக்கிய ஆதரவாளராக இருக்கும் எலான் மஸ்க்கிற்கு இந்த ஆட்சியில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications