தற்போது உலக அளவில் வேலைவாய்ப்பு சந்தை பெரிய மாற்றத்தை கண்டு இருக்கிறது. அவ்வளவு எளிதாக யாருக்கும் வேலை கிடைப்பது கிடையாது. இருந்தாலும் சரியான வேலைக்கு சென்று பொருத்தமான திறமைகளை வளர்த்துக் கொள்பவர்கள் நிச்சயம் இந்த வேலை வாய்ப்பை சந்தையில் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெறுகிறார்கள்.
10-15 ஆண்டுகளாக வேலை செய்த ஊழியரை பணி நீக்கம் செய்வது, திடீரென சம்பளத்தை குறைப்பது என பெரிய பெரிய நிறுவனங்களே ஊழியர்களை மோசமாக நடத்தும் நிலையில் அதற்கு விதிவிலக்காகவும் சில நிறுவனங்கள் இருக்கின்றன., ஊழியர்களை மதிப்பது அங்கீகரிப்பது போன்றவற்றின் மூலம் சில நிறுவனங்கள் ஊழியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

அந்த வகையில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் வேலைக்கு சேர்ந்து நான்கு மாதங்களில் 100% சம்பள உயர்வு பெற்றது எப்படி என்பது குறித்து ரெடிட் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . இது பலருக்கும் பல்வேறு விஷயங்களை கற்றுத் தரக் கூடியதாக அமைந்திருக்கிறது.
ரெடிட் பக்கத்தில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் வெளியிட்டிருக்க கூடிய அந்த பதிவில் புதிய நிறுவனத்தில் சேர்ந்து நான்கே மாதங்களில் சம்பள உயர்வு பெற்றேன் என தலைப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் . அதில் ஒரு நான் தற்போது வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னால் தான் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். இது ஒரு மத்திய அளவிலான ப்ராடக்ட் அடிப்படையிலான நிறுவனம். முழுக்க முழுக்க வீட்டில் இருந்தபடி தான் வேலை செய்கிறேன்.
நான் இங்கே வேலைக்கு சேர்ந்து போதே முன்பு இருந்த நிறுவனத்தை விட 100% சம்பளம் உயர்வோடுதான் வந்தேன். நான் கேட்ட அனைத்து வசதிகளையும் இந்த நிறுவனத்தில் செய்து கொடுத்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்த நான்கே மாதத்தில் நிறுவனத்தில் மீண்டும் அப்ரைசல் டைம் வந்தது அப்போது எனக்கு அப்ரைசல் இருக்காது என நினைத்தேன் ஆனால் என்னுடைய மேலாளர் என்னை அழைத்து எனக்கு மீண்டும் 100% சம்பள உயர்வு வழங்கினார் என கூறியிருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ நிறுவனங்களில் நான் வேலை செய்திருக்கிறேன் ஆனால் இந்த நிறுவனத்தில் கிடைத்த திருப்தியும் நிம்மதியும் வேறு எங்கும் கிடைக்கவில்லை என கூறியிருக்கிறார். பலரும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வேலை செய்யும் ஊழியர்களையே வேலையை விட்டு நீக்குவது, சம்பள உயர்வு தராமல் வைத்திருப்பது , பதவியை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இந்த நிறுவனம் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு பாசிடிவான அணுகுமுறையை கொண்டுள்ளது. ஆனால் இப்படி சம்பள உயர்வு வந்துவிட்டது என்பதற்காக வேலையில் தேக்கமடையாமல் உற்சாகத்துடன் பணியாற்றினால் இந்த நிறுவனத்திலேயே உங்களுக்கு பெரிய வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என சிலர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications