அண்மைக்காலமாகவே பிட்காயின்கள் குறித்த பேச்சு பரவலாக எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஒரு பிட்காயின் மதிப்பு அண்மையில் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை கடந்து வர்த்தகமானது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் ஆகும்.
எனவே தொடக்கத்தில் பிட்காயினில் ஆயிரங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை சட்டபூர்வமாக நாம் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்த முடியாது.

2010 ஆம் ஆண்டில் ஒருவர் பத்தாயிரம் பிட்காயின்களை செலுத்தி ஒரு பீட்சாவை வாங்கினாராம். தற்போது அந்த பத்தாயிரம் பிட்காயின்களின் மதிப்பு 8000 கோடி என்பது தான் பிட்காயினின் வளர்ச்சியை நமக்கு எடுத்து காட்டுகிறது.
லாஸ்ட்ரோ என்ற ஐடி ஊழியர் ஒருவர் 2010 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி பீட்சா வாங்குவதற்காக பத்தாயிரம் பிட்காயங்களை பயன்படுத்தி இருப்பது குறித்து தற்போது தெரியவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அப்பொழுது ஒரு பிட்காயினின் மதிப்பு 41 டாலர்கள் தற்போது அதன் மதிப்பு பல்லாயிரம் கோடிகள்.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் பிட்காயின் அசுர வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் தந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிட்காயின்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமான தொகைக்கு வர்த்தகமான பிட்காயினின் மதிப்பு திடீரென 92 ஆயிரம் டாலருக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற தகவல் பரவுவது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு மற்றும் கையிருப்பு தொடர்பாக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பில் தான் பிட்காயின் மதிப்பும் ஒரு லட்சம் டாலரை கடந்து வர்த்தகமானது.
ஆனால் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் பிட்காயினை சேமித்து வைப்பதற்கான எந்த ஒரு முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட விரும்பவில்லை என கூறி இருக்கிறார். இதனை அடுத்து பிட்காயின் மதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இருந்தாலும் பிட்காயினின் அசுர வளர்ச்சியை நம்மால் கவனிக்காமல் இருக்க முடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் நாம் செய்யும் முதலீடுகள் மூலம் நமக்கு கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications