கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியர், தன்னுடைய நண்பர் ஒருவர் எடுத்த ஆச்சரியமூட்டும் முடிவை பற்றி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த நண்பர், அமெரிக்க டாலரில் சம்பளம் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை, அதாவது ஆண்டுக்கு கூடுதலாக ரூ.19 லட்சம் சம்பளம் கிடைக்கும் வேலையை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, தற்போது உள்ள இந்திய வேலையிலேயே தொடர முடிவு செய்துள்ளார்.
இதற்கு காரணமாக அவர் சொன்னது, தற்போது இருக்கும் அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகளை விட மனமில்லை என்பதுதான். ஆஷிஷ் ஜா என்பவரின் இந்தக் கருத்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தைத் தொடங்கிவிட்டது. அதிக சம்பளத்திற்காக வீட்டில் இருந்தே வேலை செய்வதா அல்லது குறைந்த சம்பளத்திற்கு அலுவலகத்தில் இருக்கும் சலுகைகளை அனுபவிப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

75,000 டாலர் சம்பள வாய்ப்பை நிராகரிப்பு : டெவ்ரெவ் (DevRev) நிறுவனத்தில் சல்யூஷன்ஸ் இன்ஜினியராகப் பணிபுரியும் ஆஷிஷ் ஜா, வெளியிட்டுள்ள பதிவில், தனது நண்பருக்கு ஒரு தொலைதூர வேலைக்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், அதில் அவருக்கு ஆண்டுக்கு 75,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67 லட்சம்) சம்பளமாக கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அந்த நண்பர் ஒரு நடுத்தர ஏஐ (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 4 வருட அனுபவமுள்ள தொழில்நுட்ப ஆதரவுப் பொறியாளர் (Technical Support Engineer) ஆவார். தற்போது அவரது ஆண்டுச் சம்பளம் ரூ.48 லட்சம் ஆகும். சம்பள உயர்வு கிட்டத்தட்ட ரூ.19 லட்சம் இருந்தும், அந்த இளைஞர் அந்த ரிமோட் வேலையை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்.
இதற்குக் காரணம், அவர் தற்போது அனுபவித்து வரும் அலுவலகச் சலுகைகளை விட மனமில்லை என்று ஜா தெரிவித்துள்ளார். "நண்பர் 75,000 டாலர் மதிப்புள்ள தொலைதூர வேலையை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகளுக்காக தனது தற்போதைய ரூ. 48 லட்சம் சம்பளத்திலேயே தொடர்கிறார்" என்று ஜா பதிவிட்டிருந்தார்.
விவாதப் பொருளாக மாறிய அலுவலக சலுகைகள் : ஆஷிஷ் ஜாவின் இந்த பதிவு வைரலான நிலையில், அதிக சம்பளம், அதுவும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியுடன் கிடைக்கும் வாய்ப்பை ஒருவர் எப்படி நிராகரிக்க முடியும் என்று பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்தனர்.
ஒரு எக்ஸ் பயனர், "ரூ.20 லட்சம் சம்பள உயர்வு மூலம் பெற முடியாத எந்தவொரு சலுகையும் அலுவலகத்தில் இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதாவது பெண் சக ஊழியர் மீது அவருக்கு காதல் இருக்கலாம், அதுவே இதன் ஒரே காரணமாக இருக்க முடியும்" என்று கிண்டலாக கருத்துத் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், இது "இந்த ஆண்டின் மிக மோசமான இழப்பு" என்று குறிப்பிட்டார்.
இந்தச் சம்பள விவரங்கள் குறித்துச் சந்தேகம் எழுப்பிய ஒருவருக்குப் பதிலளித்த ஜா, "சிறந்த ஸ்டார்ட்அப் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியவில்லை" என்று விளக்கமளித்தார்.
மேலும், அந்த நண்பர் இவ்வளவு பெரிய சம்பள உயர்வை துறக்கக் காரணமாக இருந்த சலுகைகள் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, ஜா, "வழக்கமான இலவச உணவு, பயணச் சலுகைகள் போன்ற விஷயங்கள்தான். அசாதாரணமான சிறப்பு சலுகைகள் எதுவும் இல்லை" என்று பதில் அளித்தார்.
இந்தச் சம்பவம், வெறும் பணம் மட்டுமல்ல, பணியிடச் சூழல், சக ஊழியர்கள் உடனான பழக்கம் மற்றும் தினசரி அலுவலகச் சலுகைகள் ஆகியவை கூட தற்போதைய தலைமுறை டெக்கிக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications