நாட்டில் பலரும் தங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ப சம்பளம் பெறாமல், மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போதும், பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கான நியாயமான மதிப்பீடு இல்லாத சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், வாழ்க்கைச் செலவுகளை கடந்து வாழ்வது கடினமாக இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றி, அனைத்து திறமையானவர்களுக்கும் நியாயமான ஊதிய வாய்ப்புகளை வழங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பணியாளர்களின் நம்பிக்கைக்கும் அவசியமான ஒன்று.

அதே சமயம், சிலர் வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி தனக்கான ஊதியத்தைப் பெற முடியாமல் இருப்பதால், சொந்தமாக தொழில் தொடங்குவதை தேர்வு செய்கின்றனர். சொந்த தொழில், முதலில் சிரமமான பாதையாகத் தோன்றினாலும், இது தன்னம்பிக்கை வளர்க்கும் வாய்ப்பாகவும், வருமானத்தை நிரந்தரமாக அதிகரிக்க உதவும் வழியாகவும் இருக்கும்.
இந்த சூழலில் தான், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தனது சம்பளம் எப்படி அதிகரித்தது என்பது பற்றி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், முதல் வேலைக்கு ரூ.26 லட்சம் சம்பளம் என்றும், இரண்டாவது வேலைக்கு ரூ.28 லட்சம், மூன்றாவது வேலைக்கு ரூ.70 லட்சம் சம்பளம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் ஐஐடி பட்டம் எதுவும் பெறவில்லை. எம்பிஏ-வும் படிக்கவில்லை. ஆனால், கடினமாக வேலை செய்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த எக்ஸ் தள பயனர்கள், அந்த இன்ஜினியரின் வேலை துறை என்ன? சம்பள பேச்சுவார்த்தை எப்படிச் செய்தார்? எந்த திறன்கள் அவரை இத்தகைய வெற்றிக்குக் கொண்டு வந்தன? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பினர்.
அதில் ஒரு பயனர், "எனது முதல் வேலை சம்பளம் ரூ.1.8 லட்சம்" என்று கூறினார். மற்றொரு பயனர், "அண்ணா.. உன் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை எப்படி இருக்கும்..? உங்கள் வேலை மிகவும் கடினமாக இருக்குமா..?" என்று கேட்டுள்ளார். ஒருசிலர், தங்களுக்கே இப்படிப்பட்ட சாதனைகள் உண்டாகிய அனுபவங்களை பகிர்ந்தனர். மற்றவர்கள், இந்த ட்வீட்டை படித்து, எதிர்காலம் குறித்து நம்பிக்கை மற்றும் ஊக்கம் பெற்றனர்.
அதில் ஒரு பயனர், "இந்தப் பதிவு எனக்கு மன அழுத்தத்தை தந்தது" என்று தெரிவித்துள்ளார். அதாவது, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், தன்னை குறைவாக உணர்ந்துள்ளார். மற்றொருவர், "உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. இது உண்மையில் பெரிய சாதனை தான்" என்று தெரிவித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் பதிவு, கடின உழைப்பும் திறமையும் இருந்தால் பெரிய வெற்றி பெற முடியும் என்பதற்கான நேரடி சான்றாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications