அதிகளவிலான OTT தளங்கள் உருவாகி வருவதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இன்னொரு OTT தளமான ஜியோ சினிமாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த இரண்டு தளங்களும் இணைந்ததால் "ஜியோ ஹாட்ஸ்டார்" என்ற பெயரில் அழைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த டெவலப்பர் "Jiohotstar.com" என்ற டொமைன் இணையதள முகவரியை வாங்கி வைத்திருந்தார். இந்த முகவரியை வாங்கினால் மட்டுமே ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்து ஒரு தளத்தை உருவாக்க முடியும்.
மேலும் இந்த டொமைன் முகவரியை விற்பனை செய்ய முடிவு செய்த அந்த ஆப் டெவலப்பர் ரூ.1 கோடி விலை நிர்ணயம் செய்து அந்த தொகையை தன் படிப்பிற்காக பயன்படுத்தப் போவதாகவும் எழுதியிருந்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த ஜியோ நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது அந்த டொமைன் பெயரை துபாயை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

ஒவ்வொரு இணையதளத்திற்கும் இருக்கும் டொமைன் பெயர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எக்ஸ்பைரி ஆகிவிடும். அதனை மீண்டும் பணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்கத் தவறினால் அந்த டொமைன் பெயரை தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேலை ஒரு நிறுவனத்திற்கு முக்கியமான டொமைன் பெயராக இருந்தால் மக்களின் மனதில் அந்த இணையதள முகவரிதான் பதிந்திருக்கும். எனவே அவற்றை மீண்டும் பெற யார் அந்த டொமைனை வாங்கி இருக்கின்றார்களோ அவர்களை அணுக வேண்டும்.
ஜியோஹாட்ஸ்டார் பிரச்சனை என்ன?: இந்த வார தொடக்கத்தில், டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆப் டெவலபர், ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைவதற்கு முன்பாகவே 2023-ஆம் ஆண்டில் ஜியோஹாட்ஸ்டார் என்ற டொமைன் பெயரை வாங்கியுள்ளார். இணைந்த நிறுவனத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் என்ற பெயர் தான் வரும் என்பதை அறிந்த அந்த நபர், இந்த டொமைன் பெயரை ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தார்.
தனது கனவு படிப்பான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக படிப்பிற்கான செலவுக்காக ரூ.1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய விரும்பினார். ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடருவதாக மிரட்டியது. இதற்கு பதிலளித்த அந்த டெவலபர், பதிப்புரிமை மீறல் எதுவும் செய்யவில்லை என்றும், பெரிய நிறுவனத்துடன் சண்டையிட தன்னிடம் வலிமை இல்லை என்றும் கூறினார். மேலும், விரைவில் இந்த இணையதளம் செயலிழந்து போகும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப வெள்ளிக்கிழமை அன்று இந்த ஜியோ ஹாட்ஸ்டார் டாட் காம் என்ற இணையதளம், இரண்டு துபாய் குழந்தைகளின் பக்கமாக மாறியது. "நாங்கள் ஜெயினம் மற்றும் ஜீவிகா. துபாயைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்சில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று தங்களைப் பற்றி அந்தக் குழந்தைகள் எழுதியிருந்தனர். இந்த இரண்டு குழந்தைகளும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் வாங்கியிருக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் இணையதள முகவரியை அதற்காக தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய பிரச்சினையை ரிலையன்ஸ் குழுமம் எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications