இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் சொத்து விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால், நல்ல சம்பளம் வாங்கும் டெக் வல்லுநர்கள் கூட, சொந்த வீடு வாங்குவது என்பது எட்டாக்கனியாகிவிட்டதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சமூக வலைதளமான ரெடிட் தளத்தில், வீடு வாங்கும் ஒருவர், தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ரூ.2.5 கோடி பட்ஜெட்டில் 3BHK அடுக்குமாடி குடியிருப்பைத் தேடி வந்ததாக பதிவிட்ட அந்த நபர், தனது பட்ஜெட்டைச் சொன்னவுடன் பெரும்பாலான பில்டர்கள் தம்மிடம் பேசுவதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனது பட்ஜெட்டைச் சொன்னதும் அவர்கள் ஆர்வத்தை இழந்து விடுகிறார்கள். இது ஒரு அவமானம் போல உணர்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள வீடுகள் கூட இந்த பட்ஜெட்டைவிட அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலைக்கு, அமெரிக்காவில் சிறந்த சுற்றுப்புறங்களில் இன்னும் நல்ல வீடுகளை வாங்கலாம். இனியும் கடினமாக உழைப்பதில் எந்த பலனும் இல்லை என்று தோன்றுகிறது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
சந்தையைப் பற்றி விவாதித்த மற்ற ரெடிட் பயனர்கள், இந்த விலையேற்றம் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு பயனர், கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் சம்பளத்திற்கும் சொத்து விலைகளுக்கும் இடையேயான இடைவெளி கடுமையாக அதிகரித்துள்ளது. நிலம், அனுமதி மற்றும் கட்டுமானச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. ஆனால், தொழில்நுட்ப ஊழியர்களின் சம்பளம் அந்த வேகத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
மற்றொரு பயனர், ஐடி துறையில் வேலை பாதுகாப்பற்ற நிலை நிலவுவதால், இவ்வளவு பெரிய வீட்டுக் கடன்கள் எடுப்பது அபாயகரமானது. இவ்வளவு எளிதாக எப்படி இத்தனை பேர் வீடு வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், Kanakapura சாலை, Hennur போன்ற பகுதிகளில் ரூ. 2.5 கோடிக்கு நல்ல 3BHK-களை பார்க்கலாம். ஆனால், இடவசதி அல்லது பில்டரின் புகழில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
பேச்சுவார்த்தை அவசியம் : ஒரு பயனர், நீங்கள் வெறுமனே விலையைக் கேட்டுவிட்டு நகர்ந்து விடுகிறீர்கள். நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஹைதராபாத்தில் ரூ.3.2 கோடி விலையை தனது நண்பர் ரூ.2.6 கோடியாக குறைத்த அனுபவத்தையும் அவர் விளக்கினார்.
மற்றொரு பயனர், அடுக்குமாடி குடியிருப்புகளைத் தவிர்த்து, ஜேபி நகர் பகுதியில் பிளாட் வாங்கி, 3 மாடி வீடு கட்டி அதில் இரண்டு தளங்களை வாடகைக்கு விட்டு கடனை அடைக்கலாம். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வாடகை வருமானம் ஈட்டலாம் என்றும் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் வாய்ப்புகளும், மலிவும் நிறைந்திருந்த பெங்களூருவில், ரூ. 2.5 கோடி என்பது ஒரு சாதாரண 3BHK-க்கு கூட போதுமானதல்ல என்ற நிலை, நகரத்தின் யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications