தொழில் தொடங்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதிக முதலீடு தேவை, சிறப்பான திட்டமிடல் மற்றும் பணியாளர்கள தேவை என்ற எண்ணத்தில் பலரும் தொழில் முனைவோர் ஆசையை வேகமாக ஒதுக்கி தள்ளி விடுகின்றனர். ஆனால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் தொழில்கள் ஏராளமாக உள்ளன.
நீங்கள் ஒரு தொழில்முனைவோராக அல்லது சொந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புபவராக அல்லது ஒரே சமயத்தில் பல தொழில் செய்பவராக இருந்தாலும், எந்தவொரு இடையூறு அல்லது அதிக செலவுகள் இல்லாமல் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி நல்ல லாபம் சம்பாதிக்கும் ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பு உள்ளது

மேலும் கற்றல் மற்றும் கற்பித்தலில் ஆர்வம் கொண்ட தங்களுக்கு ஒத்துப்போகும் சிறந்த வணிக ஐடியாக்களை தேடுபவர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை (டி.டி.ஐ.) தொடங்குவது அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.
பெரிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அடிக்கடி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. ஆனால் அது பலரால் கவனிக்கப்படாமல் போகும். இந்த இடைவெளியை குறைப்பதுதான் டி.டி.ஐ. உரிமையாளராக உங்களது பணி இருக்கும். இந்த படிப்புகள் குறித்து தனிநபர்களுக்கு தெரிவிப்பதற்கும், அவர்களை சேர்ப்பதற்கும் உங்கள் நிறுவனம் ஒரு தளமாக செயல்படும்.
படிப்புக்கான புத்தகங்கள் உடனடியாக கிடைக்கும் நிலையில், அனைவருக்கும் புரியும் வகையில் பாடங்களை விளக்குவதே உங்கள் பணி. உங்கள் பணி முடிந்ததும், தனிநபர்கள் தேர்வு எழுதுவார்கள் பின்னர் மதிப்புமிக்க சான்றிதழ் பெறுவார்கள்.
ஏற்கனவே செய்து வரும் தொழில் அல்லது பணியை நிறுத்த வேண்டிய அவசியமில்லை, இதனை பகுதி நேரமாக செய்து வருமானம் ஈட்டலாம். ஆரம்ப முதலீடாக ரூ.1 லட்சத்தில், ஒரு அறை, மேஜை, நாற்காலி மற்றும் வெள்ளை பலகையுடன் ஒரு நிறுவனத்தை தொடங்கலாம்.
டி.டி.ஐ. வெறும் யோசனை மட்டுமல்ல, இரு நிரூபிக்கப்பட்ட மாடல். 2010ல் ஜோர்டானில் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக உருவான டி.டி.ஐ., பின்தங்கிய பகுதிகளில் உள்ள இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே தொழில்முனைவு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பிசினஸில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. எளிமையான மற்றும் பெரிய முதலீடு தேவையில்லாத வர்த்தக ஐடியாவை பயன்படுத்தி நன்றாக சம்பாதிக்கலாம். பலருக்கும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள உதவிய திருப்தி கிடைப்பதோடு நீங்களும் ஒரு தொழில்முனைவோராக மாறலாம்.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications