சிறுவயதிலிருந்து சாதிக்கத் துடிக்கும் உள்ளங்கள் உலகிற்கு ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாடத்தை கற்பிக்கிறார்கள். அப்படித்தான் பஞ்சாபின் சிறிய கிராமத்தில் உள்ள இரு சகோதரிகள் தொடங்கிய எளிய முயற்சி இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வெற்றிக் கதையாக மாறியுள்ளது. தடைகளை தாண்டி இளம் வயதிலேயே இன்று தொழில் முனைவோர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கனவுகள் பெரிதாக இருந்தால் வயது ஒரு தடையே இல்லை என்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
2020-ஆம் ஆண்டு ராய்ப்பூர் கிராமத்தில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்தான் இந்தியா கோட் மில்க் ஃபார்ம். இந்த நிறுவனத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை முற்றிலும் ஆட்டுப்பாலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பஞ்சாபை சேர்ந்த இரண்டு டீனேஜர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த நிறுவனம்.

மன்னாத் மெஹ்மி என்ற டீனேஜருக்கு 12 வயது இருக்கும். அவருடைய சகோதரியான எக்னூர் மெஹ்மிக்கு 10 வயது. இந்த இரு சகோதரிகளும் பஞ்சாபில் உள்ள பாட்டியாலா என்ற கிராமத்தில் வசித்து வந்தார்கள். மன்னாத் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
மன்னாத் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் ஆட்டுப்பால் குடிப்பது நல்லது என்று ஆலோசனையை வழங்கியுள்ளார். ஆட்டுப்பால் மஞ்சள் காமாலைக்கு ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் வசித்த பகுதியில் புதிதாகக் கறந்த ஆட்டுப்பால் எங்குமே கிடைக்கவில்லை.
இதனால் மன்னாத்தும் அவரது குடும்பத்தினரும் செய்வதறியாது யோசித்துள்ளனர். அப்போதுதான் ஆன்லைன் மூலமாக ஆடு விற்பனை செய்வதை பற்றி தெரிந்து கொண்டு உடனடியாக மன்னாத் மற்றும் அவருடைய சகோதரி இருவரும் சேர்ந்து தங்கள் தந்தையின் உதவியுடன் ஒரு ஆட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். முதன்முதலாக அவர்கள் ஆடு வாங்கிய போது அதன் விலை ரூ.19,000-ஆக இருந்தது. ஆட்டை வாங்கிய பிறகு அதை எப்படி வளர்ப்பது? எங்கு வளர்ப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் பாட்டியாலவில் ஒரு வீட்டில் வசித்து வந்ததால் அந்த வீட்டின் மூன்றாவது மாடியில் ஆட்டை வளர்க்கலாம் என்று முடிவு செய்தனர்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மன்னாத்தின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கியது. 3 மாதங்களுக்குப் பிறகு ஆடு பால் கொடுக்கத் தொடங்கியதால், அதை மன்னாத்தும், அவருடைய சகோதரியும் உட்கொண்டு வந்துள்ளனர். இதனால் அவர்களாலேயே நன்மையை உணர முடிந்தது.
பருவ கால சளி மற்றும் இருமல் வழக்கமாக இருக்கும் பலவீனம் மற்றும் பிற பிரச்சனைகளும் ஆட்டுப்பாலால் காணாமல் போனது. இதனால் 2020-ஆம் ஆண்டில் மன்னாத் மெஹ்மி மற்றும் எக்னூர் மெஹ்மி இந்தியா கோட் மில்க் ஃபார்ம் என்ற பண்ணையை நிறுவினர். ஆரம்பத்தில் புதிய ஆட்டுப்பாலுக்கான தேவையை பூர்த்தி செய்ய பீட்டல் இன ஆடுகளை வாங்கியுள்ளனர். இந்த ஆடுகளின் ஆரம்ப விலை ரூ.19,000.
நாங்கள் பால் பண்ணையை தொடங்குவதில் ஆர்வமாக இருந்தோம். இதனால் எங்களுடைய தந்தை அதற்கு பணம் செலுத்தி எங்களுக்கு வாங்கி கொடுத்தார் என்று அந்த இரண்டு சகோதரிகளும் பகிர்ந்துள்ளனர். ஆரம்பத்தில் மாதத்திற்கு ரூ. 7,000 முதல் ரூ.8,000 மதிப்பிலான பாலை தான் விற்பனை செய்துள்ளனர். ஒரு லிட்டர் பாலுக்கு 400 ரூபாய் விலை நிர்ணயித்திருந்தனர்.
பண்ணையை பெரிய அளவில் விரிவுபடுத்த அவர்கள் ஆன்லைனில் பல மணி நேரம் செலவழித்து சிறந்த ஆடுகளை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது சுவிட்சர்லாந்தின் சானென் பள்ளத்தாக்கை பூர்வீகமாகக் கொண்ட சானென் ஆட்டு இனத்தை பற்றி தெரிந்து கொண்டனர். அதிக பால் கொடுக்கும் ஆட்டு இனங்களை தேட ஆரம்பித்தனர். இணையத்தில் நீண்ட நேரம் தேடிய பிறகு இந்த வகை ஆடுகளைப் பற்றி தெரிந்து கொண்டனர்.
சானென் இனம் அதிக பால் உற்பத்தி செய்யும் ஆட்டு இனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆடுகள் பிற ஆட்டு இனங்களை விட அதிக அளவு பால் கொடுக்கும் திறன் கொண்டவை. ஆரம்பத்தில் மன்னாத் ஒரு ஆட்டை 60,000 விலை கொடுத்து வாங்கினார். மொத்தம் இதற்காக ரூ.3 லட்சத்திற்கு 5 சானென் ஆடுகளை வாங்கினார்.
இந்த முதலீட்டில் ஒரு பகுதி இந்தியா கோல்ட் மில்க் ஃபார்ம்-இன் வருவாயிலிருந்து வந்தாலும் பெரும் பகுதியை அவர் தந்தை தான் ஏற்பாடு செய்தார். அவர்களின் பண்ணையில் ஆடுகள் அதிகரிக்க தொடங்கியதும் இந்தியா கோட் மில்க் ஃபார்ம் விரைவில் 25 லிட்டர் பால் உற்பத்தியை காணத் தொடங்கியது.
அதோடு தற்போது இந்தியா கோட் மில்க் ஃபார்மில் இனப்பெருக்க பிரிவையும் சேர்த்துள்ளனர். ஆடுகளுக்கு நன்கு உணவளிக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு இறுதியில் உரிமையாளர்களுக்கு விற்க்கப்படுகிறது. தற்போது இந்த ஃபார்மில் 95க்கும் அதிகமான சானென் இன ஆடுகள் உள்ளன. 2025-ஆம் நிதியாண்டில் மாத வருவாயாக இரு சகோதரிகளும் ரூ.80,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications