குழந்தைக்கு பால் வாங்க ரூ.14 இல்லாதவர்.. இன்று 800 கோடி மதிப்புள்ள பங்குகளுக்கு சொந்தக்காரர்..!

இந்தியாவில் புகழ்பெற்ற முதலீட்டாளராக இருப்பவர் விஜய் கேடியா. ஆனால் அவர் அத்தனை எளிதாக இந்த பெயரினையும் புகழையும் பெற்றுவிடவில்லை. இதற்கு பின்னால் பல்வேறு சவால்களும் கடினமான பாதைகளும் இருந்துள்ளன. அதனை கடந்து தான் அவர் தற்போது புகழ்பெற்ற முதலீட்டாளராகவும் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளுக்கு சொந்தக்காரர் ஆகவும் இருக்கிறார். மிடில் கிளாசில் தொடங்கி தற்போது கோடீஸ்வரராக உயர்ந்து நிற்கும் அவரது வாழ்க்கை பயணம் நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன் உதாரணமாக இருக்கிறது.

கொல்கத்தாவில் மிடில் கிளாஸ் குடும்பம் தான் விஜய் கேடியாவின் குடும்பம். விஜய் கேடியாவின் தந்தை ஒரு ஸ்டாக் ப்ரோக்கர். விஜய் பத்தாம் வகுப்பில் இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். இதனால் அவரது குடும்பம் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான் விஜய் கேடியா குடும்ப பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். 19 வயதிலேயே பங்குச்சந்தை முதலீட்டில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவர் பங்குச்சந்தை முதலீடுகளில் இறங்கி அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

குழந்தைக்கு பால் வாங்க ரூ.14 இல்லாதவர்.. இன்று 800 கோடி மதிப்புள்ள பங்குகளுக்கு சொந்தக்காரர்..!

இதனால் அவரது குழந்தைக்கு பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் தவித்து இருக்கிறார் .அந்த சமயத்தில் ஒரு பாக்கெட் பாலின் விலை 14 ரூபாய். ஆனால் விஜய் கேடியாவிடம் அந்த 14 ரூபாய் கூட இல்லையாம்.இது அவரது மனதை வெகுவாக பாதித்தது. இந்த நிலைமையை போக்கி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என அன்றைய தினம் தீர்மானித்தார். விஜய் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தார்.

1990களில் மும்பை வந்தடைந்த விஜய் கேடியா 1992 ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை பெரும் வளர்ச்சியை கண்ட நிலையில் அந்த சமயத்தில் வர்த்தகத்தில் இறங்கி பங்கு வர்த்தகத்திலிருந்து கணிசமான தொகையை பெற தொடங்கினார்.

கொல்கத்தாவை சேர்ந்த பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தின் பங்குகளை 35 ஆயிரம் ரூபாய்க்கு இவர் வாங்கி இருந்தார் 1992 ஆம் ஆண்டு பங்குச்சந்தை வளர்ச்சி அடைந்தபோது இதன் மதிப்பு ஐந்து மடங்கு உயர்ந்தது. இதனை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தைக் கொண்டு ஏசிசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். அது ஓராண்டு காலத்தில் 10 மடங்கு உயர்ந்தது.

இவ்வாறு தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு மும்பையில் ஒரு வீட்டினை சொந்தமாக வாங்கிய அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு வரவழைத்து செட்டில் ஆகிவிட்டார். 2022 ஆம் ஆண்டு இவர் சியாராம்ஸ் மில்க் நிறுவனத்தில் 1.1% பங்குகளை வாங்கினார்.

தற்போது விஜய் கேடியா 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் எந்த நிறுவனத்தில் பங்கு வாங்குகிறார், விற்பனை செய்கிறார் என்பதெல்லாம் உடனுக்குடனே செய்தியாகி விடுகிறது மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இவரது முதலீட்டு உத்திகளை மிக உன்னிப்பாக கவனிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+