வழக்கமாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் வருமானம் கிடைக்கும். ஆனால் காய்கறிகளைப் பயிரிட்டால் 40 நாட்களில் வருமானம் ஈட்டலாம் என்று எண்ணி ஒரு இளம் விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிரிடத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தற்போது மாதம் ரூ. 50,000 வரை வருமானம் பெற்று வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எடப்பள்ளி மண்டலத்தில் உள்ள வத்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயியான பானுசந்தர். அவர் முதலில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இதனால் அவர் காய்கறி சாகுபடி செய்யலாம் என்று எண்ணியுள்ளார்.

இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கருவேப்பிலை, கத்தரிக்காய், பாக்கு, சுண்டைக்காய், கீரை போன்றவற்றை பயிரிட்டுள்ளார். இவர் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக சுமார் 50,000 ரூபாய் செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் செடிகளை நடவு செய்த 40 நாட்களிலேயே அந்த செடிகள் அறுவடைக்கு தயாராகிவிடும். இதனைத் தெரிந்து கொண்ட பானுச்சந்தர் கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் செடியை தனது நிலத்தில் நட்டுள்ளார். வெண்டைக்காய் இரண்டு நாட்களுக்குள் சுமார் 20 தட்டுகளில் நிரப்பும் அளவு காய்த்துத்துள்ளது.
கத்திரிக்காய் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் 15 தட்டுகளில் நிரப்பும் அளவும் காய்த்துத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் சுமார் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனக் கூறுகிறார் இந்த ஏழை விவசாயி. இதன் மூலம், வாரத்திற்கு சுமார் 12,000 ரூபாய் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மாதத்திற்கு ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக கூறுகிறார். இந்த செடிகளின் பருவ காலம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இதனை இவர் கடந்த மூன்று மாதங்களாக தான் செய்து வருகிறார். இந்தச் செடிகளை சாகுபடி செய்வதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதன்பிறகு இந்த செடிகளை சுத்தம் செய்துவிட்டு மற்ற பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளார். விவசாயிகளை ஆதரிப்பதற்காக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காய்கறி விவசாயத்திற்கு மாற பானுசந்தர் முடிவு செய்தபோது, ஒரு ஆண்டிற்கு பலமுறை அறுவடை செய்யக்கூடிய பயிர்களை தேர்வு செய்துள்ளார். உதாரணமாக, வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் போன்றவை விரைவாக வளரும். மேலும் அதிகமான விளைச்சலை தரும்.
இந்தப் பயிர்களைத் தேர்வு செய்வதன் மூலம், நடவு செய்த 40 நாட்களில் வருமானம் ஈட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெற்பயிர்களை விட காய்கறி விவசாயத்தில் அதிக லாபம் கிடைப்பதாகவும் மாத வருமானம் ஈட்ட முடிகிறது என்றும் கூறியுள்ளார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் நெற்பயிர் மட்டுமின்றி காய்கறிகளையும் சேர்த்து பயிரிட்டால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications