தெலங்கானா அரசின் மாதாந்திரச் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மின்சாரத் துறையில் தூய்மைப் பணியாளர்கள் போன்ற நான்காம் நிலை ஊழியர்கள்கூட மாதத்திற்கு சுமார் ரூ2 லட்சம் வரை ஊதியம் பெறுவது கவனத்தை ஈர்க்கிறது.
அம்மாநில தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் வெளியிட்ட தகவல்படி, 2014இல் மாநிலம் உருவானபோது ரூ 1,500 கோடியாக இருந்த இந்தச் செலவு, தற்போது ரூ6,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது நிலையான செலவினங்களில் 300 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது; தேர்தல்களை ஒட்டி நடந்த ஊதிய திருத்தங்களே முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மாநாட்டில் பேசிய ராமகிருஷ்ணா ராவ், பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் உயரதிகாரிகள் மற்றும் அரசியலமைப்புத் தலைவரின் ஊதியத்தையும் மிஞ்சுவதாக விளக்கினார். குறிப்பாக, மாநில மின்சார வாரியங்களில் தலைமைப் பொறியாளர்கள் மாதத்திற்கு ரூ.7 லட்சம் வரை பெறுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் உட்பட நான்காம் நிலை ஊழியர்கள்கூட சுமார் ரூ 2 லட்சம் மாத ஊதியம் ஈட்டுகின்றனர் என்றார்.
பிற அரசுத் துறைகளைப் போலன்றி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுவதே மின்வாரிய ஊழியர்களின் உயர் சம்பளத்திற்குக் காரணம் என்று ராவ் மேலும் விளக்கினார். இந்த அதிக ஊதியப் போக்கு மின்சாரத் துறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஆரம்ப நிலை மாநகராட்சி பணியாளர்கள் கூட மாதத்திற்கு சுமார் ரூ 28,000 பெறுகின்றனர். மூன்று தசாப்தங்கள் பணி அனுபவம் கொண்ட ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தை பெற முடியும் என கூறியுள்ளார்.
கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் (GHMC) நிரந்தரப்படுத்தப்பட்ட 2 சதவீத துப்புரவுப் பணியாளர்களுக்கு, இதர சலுகைகள் இல்லாமல், சராசரியாக ரூ 70,000 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இத்தகைய கவர்ச்சிகரமான ஊதியக் கட்டமைப்பு அரசு வேலைகளுக்கான போட்டியைத் தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 563 குரூப்-1 பணியிடங்களுக்கு, ஒரு இடத்திற்கு 799 பேர் என விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அதிகரிக்கும் செலவினங்கள் இருந்தபோதிலும், வலுவான பொருளாதார செயல்திறனால் மாநிலம் நிதிச் சுமையைத் தாங்கி நிற்கிறது என்று தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா ராவ் தெரிவித்தார். தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 11 சதவீதம் என்பதையும், வருவாய் ஆதாரங்கள் சீராக அதிகரிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பின் உதவியுடன், ரூ7,000 கோடி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, 6 சதவீத மட்டுமே பிழையுடன் செயல்படுத்தப்பட்டதாகவும் ராவ் தெரிவித்தார்.
இருப்பினும், முன்வைக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிக் கொள்கை குறித்த ஒரு தீவிரமான பிம்பத்தை அளிக்கின்றன. தெலங்கானா தனது முதல் பத்தாண்டுகளில் சுமார் ரூ15 லட்சம் கோடி மொத்தச் செலவினத்தைச் சந்தித்தது. இதில், சுமார் ரூ12 லட்சம் கோடி (80 சதவீதம்) சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்பட்டது. சொத்து உருவாக்கத்திற்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் இன்றியமையாத மூலதனச் செலவு சுமார் ரூ3 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. அதே காலகட்டத்தில், சொத்து விற்பனையில் ரூ15,000 கோடி மட்டுமே கிடைத்தது. இந்த புள்ளிவிவரங்கள் அரசின் நிதி முன்னுரிமைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications