இந்திய ஐடி சேவை மற்றும் டெக் துறையில் முன்னோடியாக இருக்கும் மாநிலங்களில் தெலுங்கானா முக்கியமானது. இம்மாநில தலைநகரில் அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் புறநகர் பகுதியில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நகரம் செயற்கை நுண்ணறிவு துறையை ஊக்குவிப்பதற்கும், இப்பிரிவின் முன்னணி நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் உதவும் வகையில் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் துடிள்ளா ஸ்ரீதர் பாபு திங்கள் கிழமை பேசுகையில் "ஹைதராபாத் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. இனி அதை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக மாற்ற விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் மகேஸ்வரம், செர்லிங்காம்பள்ளி, செலெல்லா மற்றும் இப்ராஹிம்பாட்னம் மண்டலங்களில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை தெலுங்கானா தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் (TGIIC) இந்த AI நகரத்தை அமைப்பதற்காக கண்டறிந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் AI நகரம் குறித்து அமைச்சர் ஸ்ரீதர் பாபு கூறுகையில் "வேறு மாநிலங்களிலும் இது போன்ற திட்டங்கள் இருந்தாலும், அவை இன்னும் தொடங்கப்படவில்லை. உதாரணமாக, உத்தரபிரதேச அரசு 2023 டிசம்பரில் லக்னோவில் செயற்கை நுண்ணறிவு நகரத்தை அமைப்பதாக அறிவித்தது, ஆனால் அது இன்னும் தொடங்கப்படவில்லை. உபி அரசு 40 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளனர், மேலும் அது 2023 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு நகரம் லக்னோவில் உள்ளதை விட ஐந்து மடங்கு பெரியது மற்றும் 2028 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படும், இது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரமாக அமையும்" என்று பெரும் நம்பிக்கை உடன் கூறியுள்ளார்.
தெலுங்கானா அரசு செப்டம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நகரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி இந்த மாபெரும் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்த உள்ளது இம்மாநில அரசு.
மேலும் ஐடி துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 3 முதல் 11 வரை அமெரிக்கா செல்ல உள்ளனர். இந்த அமெரிக்க பயணத்தில், ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு அமெரிக்காவில் இருக்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், தலைவர்களையும் சந்தித்து அழைப்பதுடன், செயற்கை நுண்ணறிவு நகரத்தில் முதலீடு செய்யும்படியும் அழைப்பு விடுக்கவே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
More From GoodReturns

வங்கி வேலைகளிலும் கை வைக்கும் ஏஐ..!! முதல் கட்டமாக 20,000 பேரின் வேலை காலி..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications