தெலுங்கானா: தற்போதைய சூழலில் விலைவாசி உயர்வால் சாதாரண பொருளாதார நிலையில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க இயலாத நிலையில் பலர் உள்ளனர்.
அப்படி தினந்தோறும் தேவைப்படும் பொருள்களில் ஒன்றாக இருப்பது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தான். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வாழும் மக்களும் கூட தற்போது இந்த எரிவாயு அடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். விறகு அடுப்பில் சமைப்பதை விட சமைக்கும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்களின் விருப்பம் இந்த எரிவாயு அடுப்புகள் தான்.

ஆரம்ப காலத்தில் கட்டுப்படியான விலையில் கிடைத்த எரிவாயு சிலிண்டர்கள் கடந்த சில வருடங்களாக கிடுகிடுவென விலை உயர்ந்து பாமர மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்தது. என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிலிண்டர்களின் விலை உயர்வு எனும் செய்தி அனைவருக்கும் ஒருவித பதற்றத்தை தந்துவிட்டு தான் செல்கிறது.
நாடு முழுவதும் இத்தகைய பிரச்சினைகளை மக்கள் சந்தித்த வருகின்ற போதிலும் இந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் தனது மாநில மக்களுக்காக மகாலட்சுமி எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இன்று வரை இந்த திட்டத்தினால் தெலுங்கானா முழுதும் பலர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டம் "தெலுங்கானா மகாலட்சுமி யோஜனா" என்றும் "தெலுங்கானா மகாலக்ஷ்மி திட்டம்" என்றும் அழைக்கப்படுகிறது . இத்திட்டத்தின் கீழ் ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்கான வழியை தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ஏற்படுத்தி தந்துள்ளார். இந்த ரூ.500 கேஸ் சிலிண்டர் திட்டத்தை இதுவரை 18.86 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். பலர் தங்களது இரண்டாவது மானிய சிலிண்டர்களையும் பெற்றுவிட்டனர்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தெலுங்கானாவில் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். பிபிஎல், ஏபிஎல் மற்றும் அந்த்யோதயா பிரிவைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 2500 பெற விண்ணப்பித்தால் அந்த பெண் குடும்ப தலைவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
அதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ. 2500 நிதியுதவி, தெலுங்கானா மாநிலம் முழுவதும் வழங்கியுள்ளது. TRTC பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் என பயனுள்ள வகையில் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் அம்மாநிலத்தின் முதல்வர்.
பிரஜாபாலன் அபயஹஸ்தம் என்ற நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி பொது மக்களிடம் விண்ணப்பங்கள், மனுக்கள் பெறப்பட்டு மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. அந்தத் திட்டங்கள் யாவும் தற்போது தெலுங்கானா மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட வருகிறது. இத்தகைய திட்டங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் தெலுங்கானா மாநில மக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். மேலும் க்ருஹ ஜோதி என்ற திட்டத்தின் கீழ் வீட்டில் வசிக்கும் தெலுங்கானா மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். குறிப்பாக 200 யூனிட்டுக்கும் குறைவான அளவில் மின்சாரத்தை பயன்படுத்தினால் மின்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. க்ருஹ ஜோதி திட்டமானது தெலுங்கானா மாநிலத்தின் முதல் இலவச மின்சார திட்டமாகும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications