இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தையும், வர்த்தகமும் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குவதற்காகப் பெங்களூரில் அலுவலகத்தைத் திறந்தது.
இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன ஆராய்ச்சி மற்றும் வாகன தயாரிப்புப் பிரிவில் டெஸ்லா நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ட்ரைடன் தெலுங்கானாவில் தொழிற்சாலையை அமைக்க மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ட்ரைடன்
எலக்ட்ரிக் வாகன ஆராய்ச்சி மற்றும் வாகன தயாரிப்புப் பிரிவில் சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ட்ரைடன் இதில் முக்கியமான நிறுவனம். டெஸ்லா தனது கார் தொழிற்சாலையைச் சீனாவில் அமைத்த நிலையில் ட்ரைடன் தனது தொழிற்சாலையை இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா அரசு
இதற்காக ட்ரைடன் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் படி தெலுங்கானாவில் ஜஹீராபாத் பகுதியில் அமைந்துள்ள National Investment and Manufacturing Zone (NIMZ) பகுதியில் சுமார் 2,100 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
50000 எலக்ட்ரிக் கார்கள்
தெலுங்கானாவில் அமைக்கப்படும் புதிய ட்ரைடன் தொழிற்சாலையில், அடுத்த 5 வருடத்தில் 50000 எலக்ட்ரிக் கார்களை உருவாக்க உள்ளதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இத்தொழிற்சாலைக்குப் பல்வேறு சலுகைகளையும், விரைவான ஒப்புதல்களையும் அளித்து வருகிறது தெலுங்கானா மாநில அரசு.
25,000 வேலைவாய்ப்புகளை
மேலும் இத்தொழிற்சாலை மூலம் சுமார் 25,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கூறப்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ட்ரைடன் வருகை முக்கியமாக மைல்கல் ஆக விளங்கும். இதுகுறித்து தெலுங்கானா மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சரான கே.டி.ராமா ராவ் டிவீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டு-க்கு ஜஸ்ட்மிஸ்
ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன தமிழ்நாட்டில் இந்த ட்ரைடன் வந்திருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் கிடைத்திருக்கும். புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக புதிய தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications