தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவின் நான்காவது முக்கிய நகரமாக Future Cityஐ உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை தற்போது ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் சைராபாத் ஆகிய மூன்று நகரங்கள் பிரதான நகரங்களாக இருக்கின்றன.
இந்த மூன்று நகரங்களிலும் தொழில்துறை வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் இங்கே முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நான்காவதாக ஃபியூச்சர் சிட்டி என்ற பெயரில் ஒரு நகரத்தை தெலுங்கானாவில் உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஃபியூச்சர் சிட்டி அமையும் என சொல்லப்படுகிறது.

நவீன தொழில்நுட்பங்களின் தலைநகராக இது இருக்க வேண்டும் என்பதுதான் ரேவந்த் ரெட்டியின் திட்டமாகும். இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்கான பதில்களை வழங்கக்கூடிய ஒரு நகரமாக ஃபியூச்சர் சிட்டி இருக்கும் என தெலுங்கானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டு நகரமாகவும் இது இருக்கும் என கூறியுள்ள அவர் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மையமாகவும் மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாகவும் இந்த பிஃயூச்சர் சிட்டி அமையும் என தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி விளையாட்டு ,மென்பொருள் மற்றும் மருந்து துறைகளுக்கான இந்தியாவின் முக்கிய நகரங்களில் இடம் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது சுமார் 20 நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஃபியூச்சர் சிட்டி தொடர்பான தன்னுடைய திட்டங்களை எடுத்துரைத்து பல்வேறு நிறுவனங்களையும் அங்கே முதலீடு செய்யும்படி கோரினார்.
முன்னதாக ஜூலை 31ஆம் தேதி தெலுங்கானா சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஃபியூச்சர் சிட்டி தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஹைதராபாத் நகரத்திற்கு துணை நகரங்களாக செகந்திராபாத் மற்றும் சைராபாத் ஆகிய நகரங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் வருங்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டும் நான்காவதாக ஒரு நகரத்தை உருவாக்க போகிறோம் அதன் பெயர் ஃபியூச்சர் சிட்டி என சட்டசபையில் அப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
செப்டம்பர் மாதம் இந்த பகுதியில் செயற்கை நுண்ணறிவு நகரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக தெலுங்கானா அரசுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக தெலுங்கானா மாநில அரசு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஃபியூச்சர் சிட்டியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதனிடையே நியூயார்க்கை விட முன்னேறிய நகரமாக ஃபியூச்சர் சிட்டி இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துளார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications