தெலுங்கானா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலையில் இருந்தே அதிரடியாக இருந்து வருகிறது, கே சந்திரசேகரராவ் தலைமையிலான BRS கட்சி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அதிரடியாக மக்களின் ஆதரவைப் பெற்று உள்ளது.
2018 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தற்போது 52 இடத்தில் முன்னிலை, 12 இடத்தில் வெற்றி என BRS கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே பிஜேபி 1 இடத்தில் வெற்றியும் 8 இடத்தில் முன்னிலையிலும் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா பணக்கார வேட்பாளர்களின் நிலை என்ன என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.

தெலுங்கானாவில் பணக்கார மற்றும் ஏழை வேட்பாளர்கள் தேர்தல் முன்பே பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கை முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
தெலுங்கானா தேர்தலில் 270 வேட்பாளர்கள் 5 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துக்களுடன் உள்ளனர், மேலும் 950 வேட்பாளர்கள் 10 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களுடன் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட்ட 2,290 வேட்பாளர்களில், 580 பேர் (25 சதவீதம்) கோடீஸ்வரர்கள்.
இந்த கோடீஸ்வரர்களில், அதிகப்படியானோர் தற்போதைய ஆளும் கட்சியான பிஆர்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் சுமார் 114 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். குறைந்தபட்ச கோடீஸ்வரர்களை கொண்டு இருப்பது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) வெறும் 8 பேர் மட்டுமே
டாப் 10 பணக்கார வேட்பாளர்கள்:
1. காட்டம் விவேகானந்தர் (காங்கிரஸ்) - 606 கோடி ரூபாய் சொத்து - 87,541 வாக்குகள் பெற்று வெற்றி.
2. கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி (காங்கிரஸ்) - 458 கோடி ரூபாய் சொத்து - 119,624 வாக்குகள் பெற்று வெற்றி.
3. பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி (காங்கிரஸ்) - 433 கோடி ரூபாய் சொத்து - 127,820 வாக்குகள் பெற்று வெற்றி.
4. பைலா சேகர் ரெட்டி (BRS)- 227 கோடி ரூபாய் சொத்து - 76,541 வாக்குகள் பெற்று தோல்வி.
5. கும்பம் அனில் குமார் ரெட்டி (காங்கிரஸ்)- 211 கோடி ரூபாய் சொத்து - 102,742 வாக்குகள் பெற்று வெற்றி.
6. கோட்டா பிரபாகர் ரெட்டி (BRS)- 197 கோடி ரூபாய் சொத்து - 97,879 வாக்குகள் பெற்று வெற்றி.
7. காதம் வினோத் (காங்கிரஸ்)- 197 கோடி ரூபாய் சொத்து - 82,217 வாக்குகள் பெற்று வெற்றி.
8. எம்.ரவி குமார் யாதவ் (BJP)- 171 கோடி ரூபாய் சொத்து - 80,148 வாக்குகள் பெற்று தோல்வி.
9. பாண்டி ரமேஷ் (காங்கிரஸ்)- 160 கோடி ரூபாய் சொத்து - 65,248 வாக்குகள் பெற்று தோல்வி.
10. ஜெகதீஸ்வர் கவுட் (காங்கிரஸ்)- 124 கோடி ரூபாய் சொத்து - 110,780 வாக்குகள் பெற்று தோல்வி.


Click it and Unblock the Notifications