தொலைத்தொடர்பு உபகரணத் தயாரிப்பாளரான எரிக்சன் நிறுவனம் இந்தியாவில் பல முன்னணி டெலிகாம் சேவை நிறுவனத்தின் 5ஜி சேவை விரிவாக்க திட்டங்களைக் கைப்பற்றியிருக்கும் வேளையில், செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 8,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுக்குறித்து எரிக்சன் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பிய மெமோ-வில் செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8500க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
திங்கட்கிழமை தான் எரிக்சன் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் மட்டும் சுமார் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
பணிநீக்கம்
உலகம் முழுவதும் ஜனவரி மாதம் வரையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் பொருளாதார நிலைமைகளைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து வந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் வங்கியில், கண்சல்டிங், இப்போது டெலிகாம் துறை நிறுவனங்கள் வரையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
டெலிகாம் துறை
உலகம் முழுவதும் டெலிகாம் துறை 5ஜி, 6ஜி சேவையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் எரிக்சன் நிறுவனம் செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 8,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய பணிநீக்கமாக உள்ளது
எரிக்சன் சிஇஓ போர்ஜே எகோல்ம்
ஒவ்வொரு நாடுகள் நடைமுறைக்கு ஏற்ப ஊழியர்கள் பணிநீக்கம் அமையும் என்று எரிக்சன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி போர்ஜே எகோல்ம் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் குறிப்பிட்டு உள்ளார். பல நாடுகளில் இந்த வாரம் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது எனவும் Borje Ekholm தெரிவித்துள்ளார்.
SAP பணிநீக்கம்
உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் SAP தனது பங்கிற்குப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் SAP நிறுவனம் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. SAP இந்தியாவில் பெங்களூர், கூர்கான் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications