வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்! ஜியோ-வை ஓரம்கட்டிய ஏர்டெல்.. Jio-வின் ஐபிஓ மேஜிக் முடிந்ததா..?

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல்-க்கு மத்தியில் வர்த்தக ரீதியாக தொடர்ந்து கடுமையான போட்டி இருந்து வரும் வேளையில், ஜியோவின் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பெரும் ஆதிக்கம் பெற்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது ஜியோ பிளாட்பார்ம்ஸ்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ 30000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டுப் பெறும் வெற்றி கண்டது மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு உயர்ந்தது, இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் வாயிலாக விட்ட இடத்தை மீண்டும் பிடித்துள்ளது ஏர்டெல்.

வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்! ஜியோ-வை ஓரம்கட்டிய ஏர்டெல்.. Jio-வின் ஐபிஓ மேஜிக் முடிந்ததா..?

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏர்டெல் பங்குகள் 2.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 2,107 ரூபாய் என்ற அளவில் முடிந்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏர்டெல் பங்குகள் இந்த வாரம் 5.74 சதவீதமும், ஒரு மாதத்தில் 14.90 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்கு விலை கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்து அதன் சந்தை மதிப்பு 12.94 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் மீண்டும் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளது ஏர்டெல், ஜியோ 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தில் வழக்கம் போல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 17.86 லட்சம் கோடி மதிப்பீடு உடன் கிங்மேக்கராக உள்ளது.

Also Read

ஏர்டெல் பங்குகளின் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவுகள், இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் வருடாந்திர அடிப்படையில் சுமார் 31 சதவீதம் உயர்ந்து 6,791.6 கோடி ரூபாயில் இருந்து 8,887.5 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ARPU அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 31 சதவீதம் அதிகரித்து 271 ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் 256 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் EBITDA அளவு என்பது 17.8 சதவீதம் அதிகரித்து 35,240 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ஏர்டெல் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து பங்கு விலை உயர்வுக்கு வலி வகுத்து, சந்தை மதிப்பீட்டளவில் மீண்டும் 2வது இடத்தை பிடித்துள்ளது ஏர்டெல். ஜியோ இப்போது பங்குச்சந்தைக்கு வந்திருந்தாலும் 2002லேயே ஐபிஓ வெளியிட்டு வந்த ஏர்டெல் பல போட்டி, போராட்டங்களை தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளது.

இதேவேளையில் ஜியோ பங்குகள் இந்த வாரம் மொத்தாக 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதோடு ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து பார்க்கும் போது 1 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது, இதைவிட முக்கியமாக ஐபிஓ விலையை காட்டிலும் அதிகமாகவே வர்த்தகமாகி வருகிறது. இதனால் ஜியோவின் ஐபிஓ மேஜிக் இன்னும் முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+