புதிய தகவல் தொடர்பு சட்டம் 2023: டெலிகாம் துறையில் புதிய யுகம் பிறக்கிறது..!

இந்தியாவில் ஜூன் 26 ஆம் தேதி முதல் புதிய தகவல் தொடர்பு சட்டம், 2023 (Telecommunications Act 2023) அமலுக்கு வருகிறது. தகவல் தொடர்பு துறையில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட ம‌‌பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, 1885 ஆம் ஆண்டின் இந்திய டெலிகிராம் சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் இந்திய வயர்லெஸ் டெலிகாம் சட்டம் ஆகிய பழைய சட்டங்களை இந்த புதிய டெலிகம்யூனிகேஷன் சட்டம் மொத்தாக ரீப்லேஸ் செய்கிறது.

புதிய தகவல் தொடர்பு சட்டத்தில் என்ன மாற்றங்கள் இருக்கும்? அவற்றை விரிவாகப் பார்ப்போம்:

 புதிய தகவல் தொடர்பு சட்டம் 2023: டெலிகாம் துறையில் புதிய யுகம் பிறக்கிறது..!


அவசர நிலைக் காலங்களில் அரசின் கட்டுப்பாடு: தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற அவசர காலங்களில், தகவல் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை அரசு தனது சொந்த கட்டுப்பாட்டில் ஏற்க புதிய தகவல் தொடர்பு சட்டம் 2023 கீழ் அதிகாரம் பெற்றுள்ளது.

பயனர்கள் பாதுகாப்பு: DATA is New Age weapon என்பதற்கு இணையாக தகவல் தொடர்பு என்பது மக்களை அதிகாரம் அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகும். இருப்பினும், தவறாகப் பயன்படுத்தப்படும் போது, பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, தேவையற்ற வணிக பயன்பாடுகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

அனுமதி தேவை: புதிய தகவல் தொடர்பு சட்டத்தின்படி, தகவல் தொடர்பு நெட்வொர்க்கை நிறுவவோ, இயக்குவோ, சேவைகளை வழங்கவோ அல்லது டவர் போன்ற கட்டமைப்புகளை வைத்திருக்கவோ விரும்பும் எந்தவொரு நிறுவனமும் அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும், தகவல் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் மத்திய அரசுக்கு வழங்குகிறது.

யுனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் ஃபண்ட் (USOF): புதிய சட்டத்தின் கீழ், யுனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் ஃபண்ட் (USOF)-ன் அடிப்படை நோக்கம் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வசதி குறைந்த கிராமப்புற, தொலைதூர பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள், ப்ராடெக்ட்கள மற்றும் புதிய முயற்சிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கப்படும்.

Sandbox: புதிய தகவல் தொடர்பு சட்டம் 2023 மூலம் புதிய தொழில்நுட்பத்தை நிறுவும் போதும் சட்ட வழிமுறை மற்றும் ஒழுங்குமுறையை அரசு வழங்க வழிவகை செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+