தெலங்கானா மாநிலம் முகமது நகரை சேர்ந்தவர் பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி ஒரு தக்காளி விவசாயி. கடந்த ஆண்டு அவர் பல கோடி ரூபாய்க்கு தக்காளியை சாகுபடி செய்து விற்று லாபம் பார்த்துள்ளார். மார்க்கெட்டில் எப்போதெல்லாம் தக்காளிக்கு கிராக்கி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகளவு தக்காளியை விளைவிக்கும் டெக்னிக்கை பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி கற்று வைத்துள்ளார்.
ஏப்ரல், மே மாதங்களில் அவர் தக்காளியை சாகுபடி செய்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அறுவடை செய்கிறார். இந்த மாதங்களில் பொதுவாகவே மார்க்கெட்டில் தக்காளிக்கு அதிக டிமாண்ட் இருக்கும்.

2023இல் தக்காளி விலை கிலோ ரூ.200ஐ தாண்டியது. கடந்த ஆண்டு 8 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்த மகிபால் ரெட்டி இப்போது அதை 30 ஏக்கருக்கு அதிகரித்துள்ளார்.
கோடைக்காலத்தில் தக்காளி செடியை விவசாயிகள் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். கோடையில் தக்காளியை நிழற்காய்ச்சலாக விளைவிக்க வேண்டும் என்கிறார்.
ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.3 லட்சத்தை விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும். கூலி, உழுதல், உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இதர செலவுகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும்.மழை மற்றும் குளிர் காலங்களில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை தான் செலவு செய்கின்றனர். தனது நிலத்தில் ஏக்கருக்கு 35 டன் தக்காளியை மகிபால் ரெட்டி விளைவிக்கிறார்.
மழைக்காலத்தில் விளைச்சல் 17 டன்னுக்கும் குறைவாக இருந்துள்ளது.
கடுமையான கோடை முடிந்ததும் தக்காளி செடிகள் பலத்த மழையைத் தாக்குப்பிடிக்க வேண்டும். இதற்கு நிழல் தரும் வலைகளை பயன்படுத்த வேணடும் என்று அவர் கூறுகிறார்.
மற்ற காய்கறிகள் எல்லாம் 30 முதல் 45 நாட்களில் விளைந்து விடும். ஆனால் தக்காளி விளைவதற்கு 90 நாட்களாவது ஆகும்.
காய்கறிகளை விளைவித்து வரும் ஹனீப் என்ற விவசாயி தக்காளி சாகுபடியில் அதிக அபாயங்கள் இருப்பதால் கடந்த 2 வருடங்களாக தக்காளியை விளைவிப்பதில்லை என்கிறார். அதேநேரத்தில் மகிபால் ரெட்டி துணிந்து தக்காளியை சாகுபடி செய்து லாபம் ஈட்டுவது பாராட்டுக்குரியது என்கிறார்.
மகிபால் ரெட்டி இந்த ஆண்டு 30 ஏக்கரில் தக்காளியை வெற்றிகரமாக பயிரிட்டார். சில்லறை மார்க்கெட்டில் விலைகள் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் விளைச்சலைப் பெறத் தொடங்கினார்.
இரண்டு வாரங்களுக்கு முன், மொத்த மார்க்கெட்டில் கிலோ 18 ரூபாய்க்கு கிடைத்து. தற்போது, 50 ரூபாயை தாண்டியுள்ளது. பல ஏற்ற இறக்கங்களை கண்டதாக கூறிய ரெட்டி, இந்த ஆண்டு மார்ச் மாதம் தக்காளியை கிலோ ரூ.7க்கு விற்றதாக கூறினார்.
story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications