உலகின் முன்னணி பிபிஓ சேவை நிறுவனமான டெலிபர்பாமென்ஸ்-ன் ஊழியர்கள் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தனது ஊழியர்கள் வீட்டில் AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு ஊழியர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
பல லட்சம் ஊழியர்களின் தனியுரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை எடுக்க டெலிபர்பாமென்ஸ் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?!
டெலிபர்பாமென்ஸ் பிபிஓ சேவை
டெலிபர்பாமென்ஸ் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவில் பதிப்பிடப்படும் உலகின் முன்னணி பிபிஓ நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், கூகுள், உபர் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பிபிஓ சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் பல வங்கிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
3.8 லட்சம் ஊழியர்கள்
டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அலுவலகத்தில் சுமார் 3.8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 70,000 ஊழியர்கள் இந்திய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தொற்றுக் காரணமாக இந்நிறுவனத்தின் சுமார் 2.4 லட்சம் ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள்.
AI கேமரா மூலம் கண்காணிப்பு
இந்நிலையில் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகளையும், ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கண்காணிக்க AI கேமரா ஊழியர்கள் வீட்டில் பொருத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கொலம்பியா அலுவலக ஊழியர்கள் ஒப்பந்தம்
இதன் முதல் கட்டமாக டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் கொலம்பியா அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி AI கேமரா மூலம் ஊழியரின் குடும்பம் (குழந்தைகள் உட்பட), ஊழியரின் வீடு, வாய்ஸ் அனலிட்டிக்ஸ், சேகரிப்புச் செய்யப்பட்ட தரவுகளைப் பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துள்ளது இந்நிறுவனம்.
டெலிபர்பாமென்ஸ் ஜெய்ப்பூர் கிளை
இந்நிலையில் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் கூறுகையில் ஊழியர்களின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நேரத்தில் மட்டும் கண்காணிப்புச் செய்யப்படும்.
ஸ்னாப்ஷாட் மூலம் கண்காணிப்பு
ஊழியர்கள் கண்காணிக்கப்படும் நேரத்தில் ஊழியர்கள் பணியாற்றும் இடத்தையும், பகுதிகளையும் பாதுக்காப்பு கருத்து ஸ்னாப்ஷாட் எடுத்துச் சேமிக்கப்படும் எனவும் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்குப் பதில் அளித்துள்ளது.
வீடியோ கண்காணிப்பு இல்லை
மேலும் மிகவும் சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இத்தகைய கடுமையான பாதுகாப்பு காரணிகளை அமல்படுத்த நிர்ப்பந்தம் செய்யும். இந்த AI கேமரா மூலம் ஊழியர்கள் பணியாற்றுவதை ஸ்னாப்ஷாட் மட்டுமே எடுக்க அனுமதி உண்டு, தொடர்ந்து வீடியோ வாயிலாகக் கண்காணிக்க அனுமதி இல்லை எனவும் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
அல்பேனியா அரசு தடை
டெலிபர்பாமென்ஸ் நிறுவனம் AI கேமரா மூலம் ஆப்பிள் பிரிட்டன் கணக்கில் பணியாற்றும் ஊழியர்கள் பணியாற்றுவதைக் கண்காணிக்கும் திட்டத்தை அல்பேனியாவில் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டபோது. அல்பேனியா அரசு 2020ஆம் ஆண்டு இறுதியில் இதற்குத் தடை விதித்தது.
பிபிஓ ஊழியர்கள்
ஏற்கனவே பல பிபிஓ ஊழியர்கள் TimeDoctor, Toggl, Timely மற்றும் Tickspot போன்ற பணியாற்றும் நேரத்தில் டிராக் செய்யும் செயலிகளையும், Basecamp, Asana மற்றும் Trello போன்ற திட்ட மேலாண்மை கருவிகளையும் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது கேமரா மூலம் கண்காணிப்புச் செய்வது இத்துறை ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications