சீனாவை சேர்ந்த பிஒய்டி என்ற மின்சார வாகன நிறுவனம் எலான் மஸ்கின் டெஸ்லாவிற்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. உலகளவில் மின்சார வாகன விற்பனையில் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி பிஒய்டி முதலிடத்தை பிடித்துவிட்டது.
கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களின் விற்பனையை தொடங்கி உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. பிஒய்டி ஏற்கனவே இந்தியாவில் தன்னுடைய கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டெஸ்லாவுக்கு போட்டியாக பிஒய்டியும் இந்தியாவில் உற்பத்தி ஆலை நிறுவ இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் தெரிவித்துள்ளார். இந்தியா குளோபல் ஃபோரம் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் மத்திய அரசின் விதிமுறைகளின் படி செயல்படும் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய அரசு எந்த நிறுவனங்களை இந்திய சந்தைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைக்கு பிஒய்டி நிறுவனத்திற்கு அனுமதி இல்லை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார். சீனாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் சர்வதேச அளவிலான வர்த்தக விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கும் விற்பனையை தொடங்குவதற்கும் அத்தனை எளிதில் அனுமதி வழங்குவது கிடையாது.
பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தான் அரசு அனுமதி வழங்கும். அது தவிர இந்த நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு கூட்டு நிறுவனத்தை தொடங்கி தான் தங்களுடைய செயல்பாடுகளை தொடங்க முடியும். சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என பியூஷ் கோயல் கூறியிருக்கிறார்.
சீனா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தாலும், அது தவறான வர்த்தக நடவடிக்கைகளின் மூலமே நடைபெறுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்காவின் போட்டி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கோயல் இந்த சூழலை ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் நிலையில் இந்தியா இருக்கிறது என தெரிவித்துள்ளார். குறுகிய கால சவால்களை எதிர் கொண்டு நாம் இந்த காலகட்டத்தை நமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவோம் என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது நான் பொருளாதார நிபுணரும் அல்ல ஜோதிடரும் அல்ல என கூறினார். இருந்தாலும் டாலருக்கு நிகரான சர்வதேச நாணயங்கள் பெரும் சரிவை கண்டாலும் இந்தியா ரூபாய் பெரிய சரிவை அடையவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications