எலான் மஸ்க் இந்தப் பெயரே தற்போது மிகப்பெரிய பிராண்டாக மாறியுள்ள நிலையில், எலான் மஸ்க் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தற்போது உலகளவில் டிரெண்டாகி வருகிறது. சமீபத்தில் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார்களின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை பைடன் குறிப்பிடவில்லை.
இதற்கு எலான் மஸ்க் ஜோ பைடன் டிவிட்டர் கணக்கில் கடுமையாக விமர்சனம் செய்தார், இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் டெக் உலகின் இன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கும் எலான் மஸ்க் வெறும் 19 வயது சிறுவனைத் தனது டிவிட்டர் கணக்கில் பிளாக் செய்துள்ளார்.
எலான் மஸ்க்
உலகையே புரட்டிப்போடும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் 19 வயது மட்டுமே ஆன ஜாக் ஸ்வீனி என்பவரை டிவிட்டரில் பிளாக் செய்துள்ளார்.
எலான் மஸ்க் பிளாக் செய்யும் அளவுக்கு ஜாக் ஸ்வீனி என்ன செய்தார்..?
யார் இந்த ஜாக் ஸ்வீனி
ஜாக் ஸ்வீனி உலகின் முன்னணி தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பிரைவேட் ஜெட் விமானத்தின் இருப்பிடத்தையும், அந்த விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்பது குறித்து டிவிட்டரில் தொடர்ந்து பாட் மூலம் டிவீட் செய்து வருகிறார்.
கல்ப்ஸ்ட்ரீம் விமானம்
இதில் எலான் மஸ்க்-ன் பிரைவேட் ஜெட் கல்ப்ஸ்ட்ரீம் விமானமும் அடக்கம். இப்படி விமானம் எங்குச் செல்கிறது, எங்கு இருக்கிறது என்பது குறித்து ரியல் டைம் டேட்டாவை ஜாக் ஸ்வீனி டிவிட்டரில் பதிவு செய்து வருகிறார்.
@ElonJet கணக்கு
எலான் மஸ்க் இது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதால் ஜாக் ஸ்வீனி-யிடம் தனது விமானத்தின் இருப்பிடத்தைப் பதிவிடும் @ElonJet டிவிட்டர் கணக்கை மூட நவம்பர் 2021ல் வேண்டுகோள் விடுத்தார். இதுமட்டும் அல்லாமல் @ElonJet கணக்கை மூடுவதற்கு 5000 டாலர் தருவதாகவும் எலான் மஸ்க் கூறினார்.
50000 டாலர் வேண்டும்
5000 டாலரை பெற மறுத்த ஜாக் ஸ்வீனி தனது கல்லூரி கட்டணத்திற்கும், புதிய டெஸ்லா கார் வாங்குவதற்கும் 50000 டாலர் வேண்டும் என கேட்ட நிலையில், எலான் மஸ்க் மவுனம் காத்த நிலையில் பல கட்ட விவாதத்திற்குப் பின்பு, ஜாக் ஸ்வீனி ஜனவரி 26ஆம் தேதி பணத்திற்குப் பதில் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கேட்டார் ஜாக் ஸ்வீனி.
டிவிட்டரில் பிளாக்
இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் டிவிட்டரில் எவ்விதமான பதிலும் தெரிவிக்காமல் ஜாக் ஸ்வீனி-ஐ பிளாக் செய்துள்ளார். மேலும் எலான் மஸ்க்-யிடம் ஜாக் ஸ்வீனி இந்தக் கணக்குகளையும், மென்பொருள் மூலம் இயங்கும் பாட்களையும் தனது பள்ளியில் இருந்து உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications