இந்தியாவின் பெரு நகரங்கள் அனைத்தும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சோகத்தின் உச்சத்தில் தள்ளுகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் அதுவும் தான் பணியாற்றும் நகரத்திலேயே வாங்க வேண்டும் எனத் திட்டமிடுவோருக்குத் தாறுமாறான விலை உயர்வின் காரணமாக இது எட்டாக் கனியாகவே உள்ளது.
ஆனால் இப்போது இந்த நிலைமை மாறி வருடத்திற்குக் கோடி ரூபாய் சம்பாதிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்குமே எட்டாக் கனியாக மாறிவிட்டது என்பது தான் சோகமான விஷயம். அன்று முதல் இன்று வரையில் எப்போதும் டிமாண்ட் குறையாமல் இருக்கும் இரு விஷயம் நிலமும், தங்கமும் தான்.

அந்த வகையில் ஹைதராபாத் நகரத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக நகரம் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடு, காலி இடத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து ஹைதராபாத்தில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ-கள் இப்போது அமெரிக்காவிலேயே முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் தான் வியப்பு அளிக்கிறது, ஹைதராபாத்தின் ரியல் எஸ்டேட் விலையும் அமெரிக்காவின் சில ரியல் எஸ்டேட் பகுதிகளின் விலையும் இணையாக இருக்கிறது என்பது தான். இதனால் பல என்ஆர்ஐகள் குறிப்பாகத் தெலுங்கு பேசும் என்ஆர்ஐ-கள் ஹைதராபாத்தில் முதலீடு செய்வதை விடுத்து அமெரிக்காவிலேயே முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் சராசரியாக ஒரு ஏக்கர் நிலம் 40 முதல் 50 கோடி ரூபாய் வரையில் வர்த்தகமாகிறதாம், ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பகுதிகளான டலாஸ், ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் 4 முதல் 6 கோடி ரூபாய் வரையில் மட்டுமே விற்கப்படுகிறது. இப்பகுதிகளில் முதலீடு செய்வது மூலம் அதிகளவிலான லாபத்தை நீண்ட கால அடிப்படையில் பெற முடியும்.
இதனால் ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் இருந்து அமெரிக்காவில் வாழும் கார்பரேட் உயர் அதிகாரிகள், டெக் வல்லுனர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் ஹைதராபாத்தில் முதலீடு செய்வதை விடுத்து அமெரிக்காவில் முதலீடு செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்தே டலாஸ், டெக்சாஸ், அஸ்டின் பகுதிகளின் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேபோல் இப்பகுதிகளில் தற்போது டெஸ்லா, சாம்சங் உட்படப் பல நிறுவனங்கள் உள்ளதால் வேலைவாய்ப்பு, வொர்க் லைப் பேலென்ஸ் ஆகியவற்றுக்கு ஏற்ற இடமாக மாறி வருவதால் இந்தியர்களும் இப்பகுதியில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications