மேற்படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். அவ்வாறு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சென்சஸ் பியூரோ (US Census Bureau data) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த தெலுங்கு பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை 3.2 இலட்சம் , அதுவே 2024 ஆம் ஆண்டில் நான்கு மடங்கு அதிகரித்து 12.3 லட்சம் என உயர்ந்துள்ளது.

குறிப்பாக கலிபோர்னியாவில் தான் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர் என தெரிய வருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர். டெக்சாஸில் 1.5 லட்சம் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர் வசிக்கின்றனர் என இந்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இல்லினாய்ஸ் பகுதியில் 83,000 பேரும்,விர்ஜீனியாவில் 78,000 பேரும், ஜார்ஜியாவில் 52,000 பேரும் தெலுங்கு பேசக்கூடிய மக்களாக இருக்கின்றனர்.
அனைத்து மாநிலங்களிலும் தெலுங்கு பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது என இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் தற்போது பேசப்படும் 350 மொழிகளில் அதிகமானவர்கள் பேசக்கூடிய வெளிநாட்டு மொழிகளின் பட்டியலில் தெலுங்கு 11ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் 60,000 முதல் 70,000 மாணவர்கள் செல்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் தங்களிடம் பதிவு செய்வதாக வட அமெரிக்காவில் இருக்கக்கூடிய தெலுங்கு பேசும் மக்களின் கூட்டமைப்பின் தலைவர் அசோக் கொல்லா தெரிவிக்கிறார்.
அமெரிக்காவுக்கு வருகை தருபவர்களில் 75% பேர் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடுகின்றனர் என சுட்டிக்காட்டும் அவர், பெரும்பாலானவர்கள் டல்லாஸ், வடக்கு கரோலினா , நியூ ஜெர்சி ஆகிய இடங்களில் செட்டிலாகின்றனர் என கூறுகிறார்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் குடி பெயர்ந்த தெலுங்கு பேசும் மக்களில் பெரும்பாலானவர்கள் தொழில் முனைவோர்கள், ஆனால் தற்போது அமெரிக்காவிற்கு வரக்கூடிய 80 சதவீதம் பேர் இளைஞர்கள் இவர்கள் பெரும்பாலும் ஐடி மற்றும் நிதித்துறைகளில் பணிபுரிவர்களாக இருக்கின்றனர் எனக் கூறுகிறார்.
அமெரிக்காவில் அதிகமானவர்கள் பேசும் இந்திய மொழிகளாக இந்தி, குஜராத்தி ஆகியவை இருந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது தெலுங்கு இடம் பிடித்திருப்பது இந்த புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்களின் விவரங்கள் அடங்கிய இந்தியன் மொபிலிட்டி ரிப்போர்ட் 2024 புள்ளி விவரத்தின் படி அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்திய மாணவர்களில் 12.5% பேர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவிற்கு செல்லும் தெலுங்கு மக்கள் தாங்கள் சொந்த மாநிலத்தில் இருப்பதைப் போல உணர்வதாக கூறுகிறார்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications