இந்தியாவின் பல முன்னணி குடும்ப வர்த்தகங்கள் தற்போது தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், ஐபிஓ-வில் பட்டியலிடவும் திட்டமிட்டு வருகிறது. அப்படி பல வருடங்களாக குடும்ப வர்த்தக கட்டமைப்பிலேயே இருந்த ஹல்திராம்ஸ் பிராண்ட் தற்போது பெரும் மதிப்பீட்டில் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
சிங்கப்பூர் அரசின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான தெமாசெக் (Temasek Holdings), இந்தியாவின் மிகப்பெரிய ஸ்நாக்ஸ் தயாரிப்பாளரான ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெமாசெக், ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் நிறுவனத்தை சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்நிறுவனத்தில் 10% முதல் 15% வரையிலான பங்குகளை வாங்க 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இந்திய ஸ்னாக்ஸ் வகைகளுக்குப் பெயர்போன நிறுவனம் தான் இந்த ஹல்திராம்ஸ், குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் வகைகள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் வட இந்திய பிராண்டாக இருந்தாலும் தென்னிந்தியாவிலும் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் தனது நற்பெயரையும், பிராண்ட் தாக்கத்தையும் பணமாக்க பல மாதங்களாக தனது பங்குகளை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறது. முதலில் டாடா குழுமம் இந்த பிராண்டை மொத்தமாக கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதை தொடர்ந்து பல வெளிநாட்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களும் பங்குகளை வாங்க முயற்சி செய்தது.
தற்போது பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் முதலீட்டை, ஹல்திராம்ஸ் தனது எதிர்கால விரிவாக்கத்திற்கும் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், அதன் IPO கனவிற்கு முக்கிய படிக்கட்டாக இருக்கும். ஆனால் இந்த 1 பில்லியன் டாலர் சுமார் 8450 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன, இறுதி ஒப்பந்தத்திற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.
1930-களில் நிறுவப்பட்ட ஹல்திராம்ஸ், இனிப்பு மற்றும் கார வகை ஸ்நாக்ஸ்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இதோடு இந்நிறுவனம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 43 உணவகங்களை இயக்கி வருகிறது. ஹல்திராம்ஸ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரையில் அகர்வால் குடும்பம் தான் நிர்வாகம் செய்து வருகிறது.
இதேவேளையில் சிங்கப்பூர் தெமாசெக், கடந்த சில வருடங்களாக இந்தியாவில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது முதலீடுகளை தொடர்ந்து அதிகரிக்கும் திட்டத்தில் தற்போது ஹல்திராம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications