இந்திய உணவுப் பொருட்கள் தயாரிப்பு துறையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் வெற்றிகரமான முடிந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த முன்னணி முதலீட்டு நிறுவனமான டெமாசெக், இந்தியாவின் புகழ்பெற்ற ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனத்தில் 10% பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
இந்தியாவில் பேகேஜ் ஸ்னாக்ஸ் விற்பனை மற்றும் வர்த்தகம் பல மடங்கு உயரும் என கணிக்கப்பட்ட நிலையில் இத்துறையில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய புதிய முதலீடுகளை செய்து வருகிறது. இதேவேளையில் பெரிய நிறுவனங்கள் அனைத்தையும் புதிய முதலீட்டை ஈர்த்து அடுத்தக்கட்டத்தை எட்ட முயற்சி செய்து வருகிறது. பல வெளிநாட்டு பிராண்டுகளே தற்போது இந்திய ஸ்னாக்ஸ் வகைகளை தயாரிக்க துவங்கியுள்ளது இத்துறையில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இப்படி இந்தியாவின் மிகப்பெரிய ஸ்னாக்ஸ் நிறுவனமாக இருக்கும் ஹல்திராம் ஏற்கனவே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்திய ஸ்னாக்ஸ் வகைகளுக்கு தனக்கென தனி அடையாளத்தை பெற்று வரும் வேளையில், இந்த பெயரையும், வர்த்தகத்தையும் பணமாக்க இதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
கடந்த 2 வருடமாக ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க டாடா குழுமம் முதல் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருவதாக பேசப்பட்டாலும், அனைவருக்கும் நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஹல்திராம் சொன்ன மதிப்பீடு. இதை பலரும் கேட்டு ஷாக் ஆகி பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர். ஹல்திராம் நிறுவனம் சுமார் 10-11 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பீட்டை கோரியது, ஆனால் பல நிறுவனங்களை 8-9 பில்லியன் டாலர் வரையிலேயே மதிப்பிட்டது.
இந்த நிலையில் பல கட்டப்பேச்சுவார்த்தைக்கு பின்பு ஹல்திராம் நிறுவனத்தை ரூ.10 பில்லியன் மதிப்பீட்டில் 10 சதவீத பங்குகளை வாங்க சிங்கப்பூர் டெமாசெக் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மாலை கையெழுத்தானதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் மற்றும் டெமாசெக் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ள இந்த ஒப்பந்தம், இந்திய ஸ்நாக்ஸ் மற்றும் உணவு துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். தற்போது டெமாசெக் நிறுவனம் மட்டுமே ஹல்திராம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால், அடுத்த சில வருடத்திலோ அல்லது காலாண்டிலே ஆல்பா வேவ் குளோபல் அல்லது பிளாக்ஸ்டோன் போன்ற பிற முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனம், கடந்த 2024 நிதியாண்டில் ரூ. 12,800 கோடி வருவாய் ஈட்டிய ஒரு சாம்ராஜ்ஜியம். இந்நிறுவனம் தற்போது 500 வகையான ஸ்நாக்ஸ், நம்கீன், இனிப்புகள், ரெடி டூ ஈட் உணவு வகைகள், pre-mixed foods மற்றும் கார்பனெடெட் அல்லாத குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
ஹல்திராம் நிறுவனம், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 100 நாடுகளில் தனது வணிகத்தை நடத்தி வருகிறது. இது, ஹல்திராம் நிறுவனத்தின் தனி பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.கே. சுடானி மற்றும் டெமாசெக் நிறுவனத்தின் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications