சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பல்வேறு வழிகளில் நிதிகள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தி இந்த அமைப்புகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டி பயங்கர தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொல்கின்றன.
உலக அளவில் பயங்கரவாதிகளுக்கு எப்படி நிதி செல்கிறது என்பதை கண்காணிக்கும் அமைப்பான The Financial Action Task Force (FATF) இந்தியாவின் நிகழ்ந்த இரண்டு முக்கியமான தாக்குதல்களுக்கு எப்படி ஆன்லைன் தளங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது. FATF வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலும், 2022 ஆம் ஆண்டு கோரக்நாத் கோயிலில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் மிக முக்கியமான ரசாயனமாக பயன்படுத்தப்பட்டது அலுமினியம் பவுடர். இந்த அலுமினியம் பவுடரை பயங்கரவாதிகள் அமேசான் வழியாக வாங்கி இருக்கின்றனர் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்தியாவிற்குள் அதிக அளவிலான வெடிப்பொருட்கள் எல்லை வழியே கொண்டுவரப்பட்டது, இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஒரு பொருள் அலுமினியம் பவுடர் . இந்த அலுமினியம் பவுடரை பயங்கரவாதிகள் விளம்பர நெட்வொர்க்கான EPOM Amazon மூலம் வாங்கி இருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறது .
முன்னதாக என்ஐஏ நடத்திய விசாரணையிலும் கூட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான வைசுல் அஸ்லாம், ஜெய் ஸ்ரீ முகமது பயங்கரவாதிகளுக்கு இந்த வெடிபொருட்களை ஆன்லைனில் வாங்கி நேரடியாக டெலிவரி செய்ததை ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தது.
அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலம் கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு ஊழியர் மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தினார் . ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. அந்த நபர் பே பால் வழியாக இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு நிதி அனுப்பியது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.தான் பணம் அனுப்புவது தெரியக்கூடாது என்பதற்காக இந்த நபர் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் எனப்படும் விபிஎன் நெட்வொர்க் வழியாக பே பாலை பயன்படுத்தி இருக்கிறார் என்றும் 44 முறை மூன்றாவது தரப்பு பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பி இருக்கிறார் என்பதும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த உதாரணங்கள் எப்படி பயங்கரவாத அமைப்புகள் ஆன்லைன் தளங்களை தங்களுக்கு சாதகமாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றன என்பதை வெளிப்படையாக காட்டுகிறது என இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக நாடுகளும் டிஜிட்டல் சேவைகளை வழங்கக்கூடிய அமைப்புகளும் இதுபோல தங்களுடைய நெட்வொர்க்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள் தற்போது ஈ காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றன என அந்த அமைப்பு கவலை தெரிவித்து இருக்கிறது .
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications