உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா முதல் முறையாக ஜூன் காலாண்டில் 1 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. அடுத்தடுத்த புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து வரும் டெஸ்லா மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றது.
இதன் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து தற்போது முதல்முறையாக ஒரு காலாண்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
ஆட்டோமொபைல் சிப் தட்டுப்பாடு
கொரோனா காலத்தில் ஆட்டோமொபைல் சிப் தயாரிப்பு மற்றும் விநியோகம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும் டெஸ்லா புதிய கார்களை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
1 பில்லியன் டாலர் லாபம்
இந்த 1 பில்லியன் டாலர் லாப அளவீடு மூலம் டெஸ்லா நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டின் மீது இருந்த நம்பிக்கையற்ற தன்மை குறைந்துள்ளது. மேலும் கார் தயாரிப்பிலும், பேட்டரி தயாரிப்பிலும் பல புதுமைகளைக் கொண்டு வரும் டெஸ்லா அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனக் கணிக்கப்படுகிறது.
ஜூன் காலாண்டு
ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் டெல்ஸா நிறுவனம் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, இதன் மூலம் ஒரு பங்கிற்கு 1.02 டாலர் வருமானத்தைக் கொடுத்துள்ளது டெஸ்லா. எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் இது மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
12 பில்லியன் டாலர் வருமானம்
கடந்த ஆண்டின் இதே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் 2021 காலாண்டில் 10 மடங்கு அதிக லாபமான 1 பில்லியன் டாலரையும், 2 மடங்கு அதிகமான 12 பில்லியன் டாலர் வருமானத்தையும் பெற்றுள்ளது. ஜூன் காலாண்டுக்குப் பின் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 630 பில்லியன் டாலராக உள்ளது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
இந்த மாபெரும் வளர்ச்சியின் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 163 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications