அமெரிக்காவில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஓரம்கட்டிவிட்டு கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்திருக்கும் எலான் மஸ்க்-ன் டெஸ்லா அடுத்தடுத்து பல கார்கள், டிரக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு தனது வர்த்தகத்தை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை பெறுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தார்.

அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு ஆட்டோமொபைல் மாநாட்டில் பேசும் போது டெஸ்லா ஏற்கனவே 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளதாகக் கூறினார்.
டெஸ்லா முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 100% இறக்குமதி வரியைக் ரத்து செய்ய அரசிடம் கோரிக்கை வைத்து இந்திய வர்த்தக சந்தைக்குள் நுழைவதை இலக்காக கொண்டு இருந்தார். கடந்த ஆண்டு, டெஸ்லாவிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள், நிறுவனம் முதலில் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் டெஸ்லா இந்திய அதிகாரிகளிடம் ஒரு உள்ளூர் தொழிற்சாலையை நிறுவவும், சுமார் 24,000 டாலர் விலையில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள 24,000 டாலர் விலை என்பது தற்போது விற்பனை செய்யப்படும் குறைந்த விலை மாடலை விட சுமார் 25% மலிவாகும்.
டெஸ்லாவின் மூத்த பொதுக் கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டு நிர்வாகி ரோஹன் படேல் சமீபத்திய மத்திய அரசின் உயர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.


Click it and Unblock the Notifications