பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்-ஐ அவரது குடும்பத்துடன் சந்தித்தது மட்டும் அல்லாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்திய அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதன் ரியாக்ஷன் தற்போது தெரியத் துவங்கியுள்ளது.
டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்க வேண்டும் என பல முறையை முயற்சி செய்து தோல்வி அடைந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் எலான் மஸ்க், பிரதமர் மோடியைச் சந்தித்த பின்பு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் தனது LinkedIn பக்கத்தில் 13 வெவ்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேடுவதாகப் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையில் தனது செயல்பாடுகளை விரைவில் டெஸ்லா துவங்கத் திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது.
டெஸ்லா நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் தொடர்புகள் முதல் பேக் ஆஃபீஸ் பணிகள் வரை பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேடி வருகிறது. மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டார்லிங்க் சேவைக்காகப் பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்கிய எலான் மஸ்க் டெஸ்லா செயல்பாடுகளை மும்பை மற்றும் டெல்லி-யில் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தற்போது டெஸ்லா இந்தியாவில் இன்சைட் சேல்ஸ் அட்வைசர், கஸ்டமர் சப்போர்ட் சூப்பர்வைசர், கஸ்டமர் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், சேவை ஆலோசகர் மற்றும் மேலாளர், ஆர்டர் ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், டெஸ்லா அட்வைசர், பார்ட்ஸ் அட்வைசர், பிசினஸ் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட், ஸ்டோர் மேனேஜர் மற்றும் சர்வீஸ் டெக்னீஷியன் போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை நியமிக்க உள்ளது.
பணியிடங்களைப் பார்க்கும் போதும், டெஸ்லா தனது முதல் ஷோரூம்-ஐ விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் திறக்கும் என தெரிகிறது. இந்த 13 பணியிடங்கள் தொழிற்சாலைக்கானது இல்லை என்ற கருத்தும் உள்ளது. இதனால் டெஸ்லா முதலில் தனது ஷோரூம் உடன் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்கிறது.
எப்படி ஆப்பிள் தனது முதல் ஷோரூம்-களை டெல்லி மற்றும் மும்பையில் திறந்ததோ அதேபோல் தற்போது டெஸ்லாவும் பாலோ செய்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்களுக்கு வரி விலக்கு கொடுப்பது குறித்து இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளும் மோடி அரசு வெளியிடாத நிலையில் டெஸ்லா கார்கள் அதிகப்படியான வரி விகிதங்கள் உடன் தான் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.
சமீபத்தில் இந்திய அரசு 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் ரக கார்களின் மீதான அடிப்படை சுங்க வரியை 110% லிருந்து 70% ஆகக் குறைத்துள்ளது. இறக்குமதி வரியில் இந்த குறைப்பு, டெஸ்லா கார் விற்பனைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications